நாளொரு குறள் 13

212

நாள் : 13
பால் : அறத்துப்பால்
அதிகாரம் : வான் சிறப்பு
செய்யுள் : 3

விண்ணின்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்
துண்ணின் றுடற்றும் பசி.

விரி நீர் வியனுலகம். அகன்ற கடல்களால் சூழ்ந்த உலகம்.

இந்த கடல் சூழ்ந்த உலகத்தில் விண்ணிலிருந்து வரும் மழை பொய்த்தால் உணவின்றி பசியால் உயிர்கள் அல்லலுறும்.

சொல்லிவிட்டாரல்லவா? என்னதான் மாபெரும் கடல்களில் நீர் நிரம்பி இருந்தாலும், அது ஆவியாகி தூய நீர் கொண்ட மழையாகப் பெய்யாவிடில் அந்த நீரினால் பயனில்லை. அது பசியடக்காது.