அடி உதவுவதைப் போல் அண்ணன் தம்பி உதவமாட்டான் என்பது புழக்கத்தில் உள்ள பழமொழி ஆகும். இப்பழமொழி தவறாகப் பொருள் கொள்ளப்பட்டு, அடிச்சுத்தான் திருத்தலாம் என்ற கோணத்தில் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இது தவறாகும்.
இங்கே அடி என்பது, கடவுளின் அடியையோ, பெரியோர் அடியையோ, நாம் வைத்த அடியையோ குறிக்கிறது என்பதே உண்மை. அதன் அடிப்படையில், கடவுளின் திருவடி உதவுவது போல் அண்ணன் தம்பி உதவ மாட்டார்கள் என்று கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் பொருள் கொள்ளலாம்.
எமக்கு முன்னால் வாழ்ந்த பெரியோரின் வழிகாட்டலைப் போல் அண்ணன் தம்பி உதவ மாட்டார்கள் என்ற பொருள் கொண்டும் இப்பழமொழி பயன்படுத்தலாம்.
எனக்குப் பிடித்ததும் மூன்றாவதுமான பொருள் இவ்வாறு அமையும். எங்கள் அனுபவங்கள் எமக்கு உதவுவதைப் போல எங்கள் அண்ணன் தம்பி கூட உதவ மாட்டார்கள்.
மூன்று பொருளையும் கொண்டு இப்பழமொழியைப் பயன்படுத்துதல் இன்னும் சிறப்பாகும்.