முள்ளிவாய்க்கால் மண்ணுக்கு வந்த கடைசிக் கப்பலுடன் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் மனிதாபிமானமும் கப்பலேறியது.

தடையம் ஏதும் விட்டு வைக்காமல் சமாதான காலத்தில் எல்லையற்ற மருத்துவர் குழுவும் எங்கள் எல்லை கடந்தார்கள். முள்ளிவாய்க்கால் மண்ணுக்கு வந்த கடைசிக் கப்பலுடன் சர்வதேச செஞ்சிலுவையின் மனிதாபிமானமும் கப்பலேறியது.

எல்லையற்ற மருத்துவர்(MSF) குழுவும் எங்கள் எல்லைகளைக் கடந்தது.

மந்திகையிலும் மல்லாவியிலும் மடுவிலும் அவர்கள் உயிர் பல காத்தார்கள். அதற்காய் என்றும் நன்றி சொல்வான் தமிழன்.

தடயம் ஏதும் விட்டு வைக்காமல் சமாதான காலத்தில் எல்லையற்ற மருத்துவர் குழுவும் எங்கள் எல்லை கடந்தார்கள்.

“மனிதாபிமானம்மேலோங்கட்டும்/Let humanity Prevail” என்ற வாசகம் தாங்கி வந்தவர்களும் தமிழர் தாய்நிலத்தில் உயிர் காக்கும் உன்னத பணியுடன் பல காலம் வேறு பல நற்பணிகளும் செய்தார்கள்.

அவர்களுக்கும் செய்நன்றி மறவா உலகின் மூத்தகுடி தம் பண்பாட்டுக்கு அமைய இருகரம் கூப்பி நன்றி சொல்வான்.

ஆனால்…

மனிதகுலத்துக்கே எதிரான பல கொடுமைகள் நடந்தேறிய முள்ளிவாய்க்கால் மண்ணில், சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் வெளியேறிய சம்பவங்கள் படிப்படியாக நடந்தேறியது.

சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் வெளிநாட்டுப் பணியாளர்கள் முதன் முதலில் வெளியேறினார்கள்.

சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் உள்ளூர் பணியாளர்கள் சற்றுப் பின்னே
வெளியேறினார்கள்.

திருகோணமலையில் இருந்து மாத்தளன், முள்ளிவாய்க்கால் வைத்தியசாலையில் காயமடைந்தவர்களை ஏற்றுவதற்காய் பின் கப்பலில் வந்து வந்து போனார்கள்.

அப்போதும் அவர்கள் “மனிதாபிமானம்மேலோங்கட்டும்” எனும் பதாகைகளையும்
தாங்கியே வந்தனர்.

முள்ளிவாய்க்கால் மண்ணுக்கு வந்த கடைசிக் கப்பலுடன் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் மனிதாபிமானமும் கப்பலேறியது.

அது மட்டுமல்ல ஒட்டுமொத்த
சர்வதேசமும் வகுத்த மானுட நேயமும் கப்பலேறியது கண்டோம்.

(முள்ளிவாய்க்கால் மண்ணில் உயிர்காக்கும் உன்னத பணியில் தியாகச் சாவடைந்த
சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் உள்ளூர் பணியாளருக்கு இந்த இடத்தில் சிரம் தாழ்த்துவோம்)