முள்ளி வாய்க்காலில் வித்தான வயவர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் புகழ்வணக்கம்.

445

அமரர் சிவசாமி அவர்கள் எங்கள் போராட்ட வரலாற்றில் என்றும் நினைவு கூரப்படவேண்டியவர்.

பலாலியில் வந்திறங்கிய இந்திய இராணுவம் இராட்சத டாங்கிகள் சகிதம் பலாலியில் இருந்து யாழ் குடாநாட்டிற்குள் நுழைய முற்பட்ட வேளை அவர்களின் முயற்சியுக்கு எதிர்ப்பை தெரிவிக்கும் நோக்கில் மக்களால் பாரிய வழிமறிப்பு போராட்டம் ஒன்று நடாத்தப்பட்டது.

இந்தப்போராட்டத்தில் முன்னின்றவர்களில் அமரர் சிவசாமி அவர்கள் முதன்மையானவர்.💪

இந்த நடவடிக்கைக்கு எங்கள்ஊரைச் சேர்ந்த மற்றுமொரு இன உணர்வாளரும் முக்கிய பங்களிப்பினை வழங்கியிருந்தார்.

இந்தப்போராட்டம் நடந்த இடம் சரியாக நினைவில்லை.
நான் நினைக்கிறேன் வயாவிளான் அச்சுவேலி வீதியில் அன்பகம்/அமலிவனம் அருட்சகோதரிகளின் இல்லத்திற்கு முன்பாகவே இந்த போராட்டம் நடந்திருக்கவேண்டும்.

பின்னர் இந்திய இராணுவத்துடன் சேர்ந்து இயங்கிய ஒரு குழுவால் அமரர் சிவசாமி அவர்களும் மற்றைய இன உணர்வாளரும் காட்டிக் கொடுக்கப்பட்டு இந்திய இராணுவத்தால் கைது செய்யப்பட்டு கொடிய காங்கேசன்துறை தடுப்பு முகாமில் பலநாட்கள் தடுத்து வைக்கப்பட்டு பல இன்னல்களை அனுபவித்தார்கள்.

எங்கள் விடுதலைப் போராட்டத்திற்காக அர்ப்பணிப்புக்களையும் பல துன்ப துயரங்களை சுமந்த அமரர் சிவசாமி அவர்கள் இறுதியாக முள்ளிவாய்க்கால் மண்ணில் குடும்பத்தோடு வீழ்ந்த வித்துக்களில் ஒருவராகிவிட்டார்.

அமரர் சிவசாமி அவர்கட்கும் அவரோடு வித்தான அவர்தம் குடும்பத்தினருக்கும், இறுதி யுத்தத்தில் சாவடைந்த அனைத்து உறவுகளிற்கு மீண்டும் ஒருமுறை புகழ் வணக்கம் செலுத்துவோம்.🙏

 

-சிற்சபேசன் அவர்களின் முகநூல் பக்கத்திலிருந்து..