தமிழில் எண்ணிப் பார்க்கிறேன்

நான் வேலை செய்வது பல்லினத்தவர் கடமை ஆற்றிவரும் ஓர் அலுவலகம் ஆகும்.
 
ஓர் நாள் எனது அலுவலகத்தில்
வேறு  இனத்தவர் ஒருவர் என்னிடம்
பின்வருமாறு கேட்டார்.
 
 “உங்கள் மொழியில் இலக்கங்களை உச்சரிக்க முடியாதா..? அல்லது உச்சரிக்கும் முறை இல்லையா?” என..!
 
நானும் பாரினில் பல்லாயிரம் ஆண்டுகள் பண்பட்ட செம்மொழியில் இல்லாதது
என்று  கூற ஒன்றுமே இல்லை.
 
உச்சரிப்பு மட்டுமல்ல
உரோம எழுத்துக்களில் எண்களை எழுதுவது போல தமிழில் எங்களால்
எண்களை எழுதவும்
முடியும்.
 
உ+ம்: க   ஒன்று      1
            உ  இரண்டு  2
             ங மூன்று     3
 
என்று சிரித்தபடி பதிலுரைத்தேன். ஆதாரத்துக்கு மொரீசியஷ் நாட்டு நாணயம் ஒன்றில் எழுதப்பட்டிருக்கும் தமிழ் எண்களையும் எடுத்துக் காட்டினேன்.
 
 
அதற்கு அவர் என் அலுவலக நண்பர்
 
“நீங்கள் தமிழர் தமிழில் பேசும் பொழுது திடீர் என இலக்கங்களை ஆங்கிலத்தில் சொல்வதை கவனித்தால்,
உங்கள் மொழியில் இலக்கங்களை உச்சரிக்கும் முறை
இல்லை என நினைத்தேன்.”
 
இதைக் கேட்டவுடன் எனக்கு
மிகவும்
வெட்கமாகவும்
வேதனையாகவும்  இருந்தது.
 
பாருள மொழிகளின் தாய்மொழியையே தாய்மொழியாகக் கொண்ட நாங்கள்
மொரீசியஷ் தமிழர்கள் போல
எண்களை தமிழில் எழுதாவிட்டாலும்,
முடிந்தளவு எல்லோருடனும் எண்களை
தமிழில் உச்சரிப்போம்,
கதைப்போம்.
 
எனது நெடுநாள் அவதானிப்பிலும் எம்மவர்
பலர் இலக்கங்கள், கிழமை நாட்கள், நிறங்கள் எல்லாம் ஆங்கிலத்தில் தான் சொல்வதுண்டு.
 
உதாரணம்: வன், ரூ, த்ரீ
                     சண்டே, மண்டே
 
செந்தமிழின் சொந்தங்களே!
மாறுவோம்!
மாற்றுவோம்!
 
உலக முதல் மொழியை காப்பாற்றுவோம்!
 
நன்றி நண்பர்களே!