தமிழன்னையின் கிரீடத்தை ஒளிர்வாய் அலங்கரிக்கவும் தேவன் வலம் வரும் தேரினை எழிலாய்ச் செதுக்கவும் தெரிந்தவர்

எங்கள் மண்ணும் மண்ணுள அனைத்தின் மீதும் அவர் கொண்டிருந்த அடங்காப் பற்றுதல் காரணமாய் எழுந்தவைதான் இப்பெரும் கவிஞரின் சகாவரம்
பெற்ற வரலாற்றுப் படைப்புக்கள்.

தேவன் வலம் வரும் சித்திரத் தேரினைச் எழிலாய் செதுக்கவும் தமிழன்னையின் கீரிடத்தை பைந்தமிழ் கொண்டு அலங்கரிக்கவும் தெரிந்த எங்கள் மாபெரும் கலைஞர்.

எம் மண்ணில் நெஞ்சை நிமிர்த்தி மிடுக்காய் உலாவிய வேளை இவர் பின்னே பிரவாகம் எடுத்தவர் பலர்.

ஆனால்,

காணாமல் ஆக்கப்பட்ட பின்னர்
மிடுக்கான எம் கவிஞரை கண்டு கொள்ளாலே எம் மண்ணில் பல தமிழறிஞர்கள்,பல்கலைக்கழக தமிழ்த்துறையினர் கடந்து செல்கின்றனர்.

நேர்மையில்லா நோர்வே தலைமையில் சமாதான நாடகம் அரங்கேற்றம் கண்டு கொண்டிருந்த நேரத்தில் யாழ்ப்பாணம் நாவலர் மண்டபத்தில் ஒரு பொத்தக வெளியீட்டுவிழாவில் நடைபெற்றது.

அர்த்தம் பொதிந்த அவ்விழாவின் போது அந்த மேடையில் கவிஞர் புதுவை இரத்தினதுரை அவர்களுடன் பல்கலைக்கழக பேராசிரியர்களும் உரை நிகழ்த்தி அசத்தினர்.

ஒரு பேராசிரியரின் உணர்ச்சி ததும்பும் மேடைப்பேச்சின் ஒரு கட்டத்தில் புதுவை இரத்தினதுரை அவர்களின் கவிதைகளையும் பாக்களையும் யாழ்பல்கலைக்கழக இறுதியாண்டு மாணவர்களின் ஆராய்ச்சிக் கட்டுரைக்காக சேர்க்க உள்ளோம் எனவும் கூறினார்.

ஆனால் இதுவரை அப்படி ஒரு ஆக்கபூர்வமான நடவடிக்கையையும் பல்கலைக்கழக தமிழ்த்துறையினர் எடுக்கவில்லை.

பரவாயில்லை அதில் சில கடினங்கள் இருக்கலாம் ஆனாலும் இப்பெரும் கவிஞர் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பாய் இதுவரை வாய் திறக்காமல் அந்தப் பெருந்தகைகள் இருப்பதுதான் அதிகம் அதிகம் வேதனை தருகின்றது.

புலம்பெயர் தேசங்களில் தமிழர்களால் இயக்கப்படும் தமிழ்ப்பள்ளிகளில் ஈகி திலீபன், தமிழீழம் எனும் தலைப்புக்களில் பாடத்திட்டம் வரையப்பட்டு உள்ளது.

அஃதே,

புலம்பெயர் தேசங்களில் உள்ள
உயர்தர மாணவர்களின் பாடத்திட்டத்தில் எங்கள் பெருங்கவிஞர் புதுவை இரத்தினதுரை அவர்கள் படைத்த கவிதைகள்,பாக்கள் இடம்பெற வேண்டும்.

வாழ்த்துக்கள் தமிழின் அரசவைக் கவிஞரே!🙏