3G – உணவுகள்!!!

செல்ஃபோன்ல தான் 3G டெக்னாலஜி வந்திருக்கு.. இதென்ன 3G உணவுவகைகள் அப்படின்னு குழப்பமா?

இது அப்படி ஹைடெக் சமாச்சாரமெல்லாம் கிடையாது..

நமக்குத் தேவைப்படுகிற சத்துக்களை கீழ காட்டியிருக்கிற மாதிரி பட்டியலிடலாம்.

1. மாவுச்சத்து (கார்போ ஹைட்ரேட்)
2. நார்ச்சத்து ( Fibre)
3. புரதச் சத்து
4. சுண்ணாம்புச் சத்து (கால்சியம்)
5. வைட்டமின்கள்
6. இரும்புச் சத்து, அயோடின், சோடியம் (உப்பு) இதுபோன்ற மினரல்ஸ்
7. கொழுப்புச் சத்து

இதை எல்லாம் 3 வகையாக அடைக்கலாம்

1. GO FOOD

இது நாம் வாழத்தேவையான சக்திகளைத் தருவது. கார்போஹைட்ரேட், நார்ச்சத்து போன்றவை இதில் அடக்கம்

2. GROW FOOD

இது நாம் வளர்வதற்கு அவசியமான சத்துகளாகும். புரோட்டீன், கொழுப்பு, கால்சியம் போன்றவை இதில் அடக்கம்

3. GLOW FOOD

இது உடல் நலம், இளமை, பொலிவான தோற்றம் போன்றவற்றிற்கு அத்தியாவசியமான வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் தரும் உணவுகள் ஆகும்.

இவற்றை தான் 3G உணவுகள் என்கிறார்கள்.

1. GO FOOD

நெல், கோதுமை, கம்பு, சோளம், ராகி, பார்லி, ஓட்ஸ் போன்ற தானிய வகைகள், உருளைக்கிழங்கு, மரவள்ளிக்கிழங்கு பொன்ற கிழங்கு வகைகளிலும் கார்போஹைட்ரேட் மிக அதிகமாக உள்ளது. நமக்கு நாள் முழுதிற்கும் தேவையான சக்தியைத் தருபவை கார்போ ஹைட்ரேட் ஆகும். முழுத் தானியங்களாக உபயோகப்படுத்துவதால் நமக்குத் தேவையான நார்ச்சத்தும் இவைகளில் இருந்து கிடைக்கிறது.

இனிப்புகள், வறுக்கப்பட்ட உணவுகள்(முறுக்கு, மிக்சர் மாதிரி) இவைபோன்ற உணவுகளைத் தவிர்ப்பது நல்லது.

நமது வேலைப் பளுவின் அளவிற்கேற்ப நமது கார்போஹைட்ரேட் உணவு இருத்தல் நல்லது.

2. GROW FOOD

பால், சோயா, பருப்புவகைகள், இறைச்சி, மீன், முட்டை,உலர்பழங்கள், எண்ணெய்/நெய்/வெண்ணெய் போன்றவற்றில் புரோட்டின், கொழுப்பு, கால்சியம் ஆகிய பொருட்கள் அதிகம் உள்ளன.

பால் சிலருக்கு ஒத்துக்கொள்வதில்லை. இறைச்சியில் ஆடு, மாடு போன்ற கொழுப்புச் சத்து அதிகமானவற்றை தவிர்க்கலாம். எண்ணெய் வகையறாவை மிகக் குறைவாக உபயோகித்தல் வேண்டும்.

வளரும் குழந்தைகள், இளைஞர்களுக்கு ஆரோக்கியம் நிறைந்த சோயா, பருப்பு, மீன், முட்டை போன்ற உணவுகள் அத்தியாவசியமானதாகும். கேன்களில் அடைக்கப்பட்ட உணவுகளைத் தவிர்ப்பது நல்லது. இவற்றில் உள்ள சோடியம் உடலுக்கு கெடுதலானது.

வயதானவர்கள், குறைந்த அளவிலான இவ்வகை உணவுகளை உட்கொள்ளலாம்.

3. GLOW FOOD

பழங்கள், கீரைவகைகள், காய்கறிகள் போன்றவற்றில் இருந்தே நமக்குத் தேவையான வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் கிடைக்கின்றன. இவற்றை பச்சையாகவும், வேகவைத்தும் உட்கொள்ளலாம்.

இளமையை நீட்டிப்பது, ஆரோக்கியம் காப்பது போன்றவற்றில் இவற்றிற்கு நல்ல பங்குண்டு.

.