யாழ்ப்பாண வைபவ கௌமுதி

கெளமுதி என்பது எங்களது சொல்” என்கிறார் என் கேரள நண்பர்.

கெளமுதி என்ற பெயரில் பிரபல நாளிதழ், சஞ்சிகைகளும் தம் மண்ணில் வெளிவருகின்றன என தன் வாதத்தைத் தொடர்ந்தார்.

கெளமுதி என்பதும் வரலாறு என்ற பொருள் கொண்ட தமிழ்ச்சொல் என்று சொன்னேன்.

தமிழ்மொழியையும் பேசக் கூடிய அவர்
“இல்லம்” “பறைதல்”… போன்ற சொற்கள் பொதுப்பாவனையில் இருப்பதையும் அறிந்து வைத்துள்ளார்.

மொழிகளுக்கெல்லாம் தாய்மொழியாக  தமிழ்மொழி இருக்கும் போது சேய் மொழியிடமிருந்து கடன் வாங்கியிருக்கச் சந்தர்ப்பம் இல்லை எனப் பண்பாகக் கூறினேன்.

பதிலுக்கு அவர் வலைத்தளத்தில் தேடி பின்வரும் விடையங்களைக் காட்டினார்.

“Kerala Kaumudi is a well-established and prominent media house of Kerala.

The brand had its inception over 106 years ago, in 1911.

It had its genesis in the vision of C V Kunhiraman, orator, litterateur and revolutionary thinker.”10:39:57

வயாவிளானில் “யாழ்ப்பாண வைபவ கெளமுதி” என்ற பெயரில் வடமாநிலத்தின் வரலாற்றினை பொத்தகமாக எழுதி வெளியிட்டவர் ஆசுகவி கல்லடி வேலுப்பிள்ளை ஆவார்.

இற்றைக்கு 100 வருடங்களுக்கு முன்னர் மாங்கனித்தீவின் வடமாநிலத்தில் “சுதேசநாட்டியம்” என்ற பத்திரிகையையும் வெளியிட்டு சமூக சீர்திருத்தக் கருத்துகளை எம் மண்ணில் விதைத்தவர் ஆசுகவி கல்லடி வேலுப்பிள்ளை.

சாக்காட்டுக்கு அனுப்ப வேண்டிய ‘சாதியம்’தொடர்பாகவும் எழுதப்பட்டுள்ளது என்ற குறைகள் சிலரால் சொல்லப்பட்டாலும், நல்லதோர் இட வரலாற்று நூல் என்பதில் இரு வேறு கருத்து இருக்கமுடியாது.

இன்றைய நாட்களில் இப் பொத்தகத்தை தமிழர்களின் எண்ணிம நூலகமாகிய நூலகத்திலும் நீங்கள் வாசிக்க முடியும்.

http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3_%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AA%E0%AE%B5_%E0%AE%95%E0%AF%86%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF

தொடரும்…