மருந்துக்கும் உங்களிடம் மனிதாபிமானம் இருந்ததில்லை மே.

எங்கள் கிளிநொச்சி மாவட்டப் பொது வைத்தியசாலையின் (DGH of Kilinochchi) முன் பக்கத்திலும் அயலிலும் நெருக்கமாக #ஆட்லெறி எறிகணைகள் வீழ்ந்து வெடித்துக் கொண்டிருந்தன.

நோயாளர்களை பாதுகாக்கும் நோக்கில்
Dr.த.சத்தியமூர்த்தி மற்றும்
Dr.ம.பிறைற்றன் தலைமையிலான மருத்துவப் பணியாளர்கள்,மருத்துவப் போராளிகள் அந்த வைத்தியசாலையினை தருமபுரம் வைத்தியசாலைக்கு பின் நகர்த்தி இருந்தனர்.

நோயளர்கள் படுக்கும் கட்டில்கள் உட்பட சில மருத்துவ உபகரணங்கள் தருமபுரத்திற்கு பாதுகாப்பாக நகர்த்தப்பட்டிருந்தாலும் Medical Ventilators இனை உடனடியாக கழற்றி தருமபுரம் வைத்தியசாலைக்கு கொண்டு வரமுடியவில்லை.

 

அந்த காலகட்டத்தில்தான் கடுமையாக மழை பெய்த ஒரு நாளில் மட்டும் இருபதிற்கும் அதிகமானோர் பாம்புக்கடிக்கு உட்பட்டு தருமபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

நரம்பு மண்டலத்தைப் பாதிக்கும் பாம்புகளின் கடுமையான நஞ்சினால் ( Neurotoxin ) பாதிக்கபப்ட்ட சிலருக்கு சுவாச செயலிழப்பும் எற்பட்டது.

தொன்னோலையால் வேயப்பட்ட சின்னஞ் சிறிய தற்காலிக கொட்டகைகளுடன் இயங்கிக் கொண்டிருந்த எங்கள் தருமபுரம் வைத்தியசாலையில் Medical ventilator இல்லாத காரணத்தால் அம்பு பாக்(Ambu bag) மூலம் கையால் செயற்கை சுவாசம் கொடுத்தோம்.

மூன்று நாட்கள் அல்லது எழுபத்திரண்டு( 72) மணித்தியாலங்கள் தொடர்ச்சியாக சுழற்சி முறையில் செயற்கைச் சுவாசம்(Artificial Respiration with the help of Ambu bag mask) கொடுத்து இருவரை காப்பாற்றினோம்.

போர்க்காயங்களால் சொல்லொணத் துன்பம் அடைந்து இடம்பெயர்ந்து கட்டாந்தரைகளிலும் வயல் வெளிகளிலும் படுத்திருந்த மக்களை பாம்புகளும் கடித்து அவலத்தின் மேல் அவலத்தைத் தந்தன.

ஆம்,

முள்ளிவாய்க்கால் அவலம் என பொதுவாக அழைக்கப்படும் இந்தப் #பேரவலம் (Disaster) என்பது தனியே முல்லைத்தீவு மாவட்டத்தின் ஓர் ஊரான முள்ளிவாய்க்காலில் நடாத்தப்பட்டது மட்டுமல்ல…!

 

மாறாக 2008 ஆம் ஆண்டின் இறுதி மாதங்களில் தொடங்கி 2009 மே மாதம் வரை
வன்னி நிலமெங்கும் நடாத்தப்பட்ட அனைத்து வகையான கொலை வெறியாட்டங்களுமே இந்த “முள்ளிவாய்க்கால் அவலம்” எனும் குறியீட்டுப் பெயருக்குள்ளே அடங்கும்.

தமிழினத்திற்கு எதிராகத் தொடுக்கப்பட்ட இந்த இனப்படுகொலையானது
உலகில் தடைசெய்யப்பட்ட பற்பல போராயுதங்கள் கொண்டு ஶ்ரீலங்கா அரசினாலும் வல்லாதிக்க சக்திகளாலும் நிகழ்த்தப்பட்டது ஆகும்.

நன்றி!

– வயவையூர் அறத்தலைவன் –