உங்கள் எதிர்பார்ப்பு யாதென்பதை இளையோர் யாமறிவோம்.

‘பூ’மாலையை நீங்கள்
எதிர்பார்க்கவில்லை!

‘பா’மாலையை நீங்கள்
எதிர்ப்பார்க்கவில்லை!

‘பொன்னாடை’யை நீங்கள்
எதிர்பார்க்கவில்லை!

‘மகரயாழ் விருதை’ நீங்கள்
எதிர்பார்க்கவில்லை!

‘பல்கலைக்கழக கௌரவ
டாக்டர் பட்டம்தனை
எதிர்பார்க்கவில்லை!

உங்கள் பாதங்களை யாரும்
தொட்டுவணங்க வேண்டும்
என எதிர்பார்க்கவில்லை!

உங்கள் கல்லறைகளை நாங்கள் கண்ணீரால் கழுவ வேண்டும் எனவும் எதிர்பார்க்கவில்லை!

மானமாவீரரே!🎖

உங்கள் பாதச்சுவடுகளில் பக்குவமாய் பாதம் பதித்து சுதந்திர வாசல்தனை தமிழரினம் அடையும் என்றே எதிர்பார்த்தீர்கள்!