நாளொரு குறள்

125

தாமரைச் செல்வன்

நாள் : 1
பால் : அறத்துப்பால்
அதிகாரம் : கடவுள் வாழ்த்து
செய்யுள் : 1

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.

அகரமே எந்த எழுத்துக்கும் முதன்மையானது எந்த எழுத்தை உச்சரிக்க நாம் வாயெடுத்தாலும் முதல் ஓசையாக அதில் “அ” மறைந்திருக்கும். பல இடங்களில் அது வெளிப்படுவதில்லை.

மூச்சு வெளிப்படும் பொழுதே “அ” என்ற ஓசை ஆரம்பித்து விடுகிறது. மற்ற ஓசைகள் நாக்கு, உதடுகள், கன்னங்கள் இப்படி பிற அங்கங்கள் வெவ்வேறு விதமாக அசைவதால் பிறவடிவம் கொள்கின்றன.

அதேபோல் ஆதியாகிய இறைவனே உலகின் முதன்மையாக இருக்கிறான். இயற்கையின் மாறுபடுகள் பலவேறாக பொருட்களையும் உயிரினங்களையும் காட்டுகின்றன.