நாளொரு குறள் – 9

238

நாள் : 9
பால் : அறத்துப்பால்
அதிகாரம் : கடவுள் வாழ்த்து
செய்யுள் : 9

கோளில் பொறியிற் குணமிலவே யெண்குணத்தான்
தாளை வணங்காத் தலை

எட்டு குணங்கள் யாது?

1. அளவின்மை – அளவிடமுடியாத தன்மை, எல்லாவனவாகவும் விரிதல் பெருவெடிப்பினால் உண்டாகும் பிரபஞ்சம்
2. தன்வயனாதல் – தனக்குள் மூழ்குதல், தன்னை அறியும் தன்மை, எல்லாவற்றையும் ஈர்த்து தனக்குள் அடக்கும் கருங்குழி
3. ஆற்றலுடமை – எல்லையற்ற சக்தியாக இருப்பவன். ஆற்றல் வடிவாகவே இருப்பவன்
4. அருளுடமை – எல்லாவற்றையும் கொடுக்கும் தன்மை, கருணை
5. இயல்புணர்வு – ஒவ்வொரு பொருளாக இருத்தலின் போதும் அதற்கான இயல்பான குணமாக இருப்பவன்
6. எல்லாம் அறிதல் –
7. பாசங்களற்றவன் – வேண்டுதல் வேண்டாமை இல்லாதவன்
8. தூய்மை –

இப்படி எட்டுகுணங்களையும் கொண்டவனது அடியினை பணிந்தறிதல் வேண்டும். அப்படி வணங்காதவர்கள், வாசமறியா மூக்கு, சுவையறியா நாக்கு, கேளாக்காது, பார்வையில்லா கண், உணர்வில்லா தோல் போன்று பயனற்றவர்கள்.