ரவீந்திரன்.. ஒரு உயிரியின் படத்தைக் காட்டினால் அவ்வுயிரியைப் பற்றி அக்குவேறு ஆணிவேறாக தகவல்கள் தரவல்லவர்.
நாங்கள் இழந்து விட்ட இயற்கை இன்பத்தை எமக்கு மீட்டு அளிக்க அயராது போராடும் போராளி.
தமிழகத்தின் மதுரை நகர் தந்த முத்து.. அவருடைய காட்டு அனுபவங்கள் உயிரை உறையச் செய்யும் ரதத்தைச் சேர்ந்தவை.
அவருடைய அனுபவம் குறிப்பொன்று..
காடுகளில் புலிகளின் கணக்கெடுப்பு நடைபெறும் வேளைகளில் அதை நடை பயணத்தில் நேருக்கு நேர் காண வேண்டும் என்பது பலரின் கனவு. ஆனால், அந்த அதிர்ஷ்டம் அனைவருக்கும் கிட்டாது.
பொதுவாக காடுகளில் வசிக்கும் புலி, சிறுத்தை போன்றவை வாகனத்தில் வரும் மனிதர்களைத் தவிர்த்து நடந்து வரும் மனிதர்களைக் கண்டால் விலகிச் செல்லவே முயலும். சில பதுங்கிக் கொள்ளும். இனப்பெருக்க காலத்திலும், பால் மணம் மாறா குட்டிகளை அது பேணும் காலங்களில் மட்டும் அவைகளின் மன நிலையை நம்மால் புரிந்து கொள்ள முடியாது.
அந்த நேரங்களில் நம்மை அது நேரடியாகவோ, அல்லது மறைமுகமாகவோ தாக்குதல் நடத்தும். ஒரு புலியின் முன்னக்காலின் அறை என்பது 90% சதவிகிதம் உங்களை மூர்ச்சை அடைய செய்யவோ, அல்லது பத்து சதவிகிதம் இறப்பை யோ ஏற்ப்படுத்தும்.
எப்போதும், ஒரு இடத்தில் இருந்து வேறு இடத்திற்கு செல்லும் புலியால் பெரிதும் அபாயம் நேராது. ஆனால் ஓய்வெடுக்கும் புலி மகா ஆபத்தானது. ஏன் எனில் அதனுடன் வேறு இணையான புலியோ, இல்லை இளம்பருவ புலிக் குட்டிகளோ இருக்கலாம்.
படத்தில் காணும் புலியானது பாறைகளில் அமர்ந்து ஓய்வு எடுத்துக் கொண்டு இருந்த நேரம் வேட்டை தடுப்பு காவலர்களின் அறிவுறுத்தலின் படி பொறுமையாக நூறடி தூரத்தில்இருந்து படமெடுத்தது.