போவோமா ஊர்கோலம்- லண்டன் தேம்ஸ் நதி

400

கடாரம் வென்ற சோழனின் 
”கடற்புறா“க் கப்பல் அல்ல இது!

 அமெரிக்கா சென்று புகழ் நாட்டிய ´´அன்னைபூரணி“க் கப்பலும் அல்ல!

அகதிகளை(83இல்)ஏற்றிக்கொண்டு காங்கேசன்துறைக்கு வந்த
கப்பலும் அல்ல!

கிளாலி நீரேறிப் பயணகாலத்தில்
 மக்களுக்கு துணை நின்ற கடற்புலிக் கப்பலும் அல்ல! 

முள்ளிவாய்க்காலுக்கு காயமேற்ற வந்த ICRC கப்பலுமல்ல!

 சுணங்காமல் வருவேனென்ற,
”வணங்காமண்” கப்பலும் அல்ல!

“பாய்” எனும் உடை தளர்த்தி,
தேம்ஸ் நதியாள் மேனியிலே
மெல்ல ஓய்வெடுக்கும் இந்தக் பாய்மரக்கப்பல்…

 பெல்ஜியத்தைச் சேர்ந்ததாம்!