அழியாமல் என்னுள்
ஒட்டி இருக்கிறது
உயிர் மாதிரி
உன் ஞாபகங்களும்..
எதிர்பாராத வினாடிகளில்
என்னையும் மீறி
ஏதாவது திசையில்
தலை நீட்டிவிடிகின்றன
பழைய சம்பவங்கள் எல்லாம்..
எனக்குள் இருந்தவாறு
உன்னையே எண்ணுகிற என்னை
உனக்குள் இருந்தவாறு
நீ எண்ணிப் பார்த்திருகிறாயோ
இல்லையோ ?
யாப்புப் போல நீ
வார்த்தைகளின் ஊடே
வசப்படாமல் போனாலும்
எழுத தகிக்கிற
ஏக்கமாயாவது நெஞ்சுக்குள் இரு..
கடவுளும் காதலித்ததை
உன்னைக் கண்டப் பிறகே
உணர்ந்தேன்..
மாற்றப் பட்டேனா..
மாற்றமுற்றேனா..
தெரியவில்லை ?
ஒவ்வொரு வினாடியிலும்
ஒரு பருவ மாற்றம்
நிகழ்கிறது..
வண்ண தாஜ்மகால்
உனை நோக்கி
என் எண்ண யமுனைத்
திரும்புகிறது..
தண்ணீரில் விழுந்த
கீறல் போல்
எதுவும் புலப்படாதவளாய் நீ..
பிள்ளையார் சுழிப் போற்
புரியாத எழுத்தா
என் காதல் ?
-ஆதி