உடலில் ஓமோன்கள் கோலோச்சும்
இந்த வயதில் எந்த ஒரு விடைத்திலும் தீவிரமாக இருப்பது ஒரு சாதாரண உளவியல்!
விரும்பிய தெய்வத்தையோ,
விரும்பிய நபர்களையோ,விரும்பிய பொருட்களையோ நிரந்தரமாகவே “பச்சை குத்தும்”/Tattooing பழக்கம் முன்னரே எங்களிடம் இருந்தது.
இன்று போல் அல்லாமல் முன்னைய காலங்களில் பச்சை குத்துவதென்பது வேதனையானது.
தமிழர் கடவுள் எனச் சொல்லப்படும்
முருகனையும் மானுட விடுதலை தேடிய ஜேசுபிரானையும் பச்சை குத்திய (Tattoo) ஒரு மூத்த சமூகம் இருந்தது.
அதன் பின்னர் எங்கள் தலைவரின் படத்தையும் புலிச் சின்னத்தையும் நெஞ்சில் பச்சை குத்திய ஒரு இடைக்கால சமூகம் இருந்தது.
70களில் தேர்தல் பிரச்சார மேடைகளில் “இரத்த திலகம்” இடுங்கள் என சொன்ன போது கையைக் கீறி அரசியல்வாதிகளுக்கு “திலகம்” அல்லது “பொட்டு” வைத்த வரலாறுகளும் எங்களிடம் உண்டு.
உணர்ச்சிகர அரசியல் ஆயுத வழியில் தொடர்ந்த போது “இரத்த திலகத்தை” பெற்றுக் கொண்ட அந்த ஜாம்பவான்கள் எங்கள் மக்களை தனியே விட்டு விட்டு கொழும்பின் ஐந்து நட்சத்திர விடுதிகளிலும் தமிழ் நாட்டிலும் வாழ்ந்ததும் உண்டு.
இங்கே தலையில் அரசியல் கட்சியின் சின்னத்தை தாங்கி நிற்கும் இந்த இளைஞன் செயல் நல்லதா கூடாத என்பதற்கு அப்பால் இந்தச் சின்னம் சுட்டும் கட்சியும் அந்தக் கட்சியில் இந்த எண்களை பிரதிபலிக்கும் வேட்பாளர்களும் இந்த இளைஞன் அவாவி நிற்கும்
#தமிழ்த்தேசிய_அரசியல்_அபிலாசையையும் இவன் சார்ந்த சமூகத்தையும் ஒரு போதும் கைவிடக் கூடாது என்பதுதான் முக்கியமானது.
நன்றி நண்பர்களே!🖌