கிருஷ்ணாகத்தில் சகுனி!

99

விருப்புக்கும் வெறுப்புக்கும் ஒரு மயிரிழை வித்தியாசம்தான்.

இரண்டிலும் ஒருவர் மற்றவரை எப்போதும் நினைத்துக் கொண்டிருக்கும் நேரம் அதிகமாக உள்ளது.

இது ஒரு மகத்தான ஒற்றுமையாகும். விருப்புள்ளவர் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைப்பதும், வெறுப்பவரை கஷ்டப்பட வேண்டும் என்றோ அல்லது அவர் மாற வேண்டும் என்றோ நினைப்பதும் வேற்றுமையாகும்.

எவ்வாறாயினும் இரண்டுமே ஒன்றுதான் என்று பல மனோவியலாளர்கள் கூறுகிறார்கள்.

மகாபாரத கதையில் வரும் கிருஷ்ணரும் சகுனியும் எதிரும் புதிரும் ஆக இருந்து கொண்டு எப்போதும் தாம்சார்ந்த தரப்பை எதிர்தரப்பிடமிருந்து காப்பதற்கு பல சூழ்ச்சிகளை செய்து கடும்பகையுடன் வாழ்ந்திருக்கிறார்கள்.

இருந்தபோதும், ஒருமுறை உள்ளத்தில் அதிகம் உள்ளவரைகாட்டும் கண்ணாடியில் கிருஷ்ணர் பார்த்த போது சகுனியின் முகம் தெரிந்ததாம்.

 

ஆக்கம் – சேரமான்.