சங்கதி சொல்லும் சங்கம ஊர்கள்.

“வெல்லாவெளி”எனும் ஊர் மட்டக்களப்பு மாவட்டத்தில் உண்டு!

“புல்லாவெளி”எனும் ஊர்
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் உண்டு!

“நிலாவெளி”எனும் ஊர் திருகோணமலை மாவட்டத்தில் உண்டு!

“கல்முனை”எனும் ஊர்
அம்பாறை மாவட்டத்தில் உண்டு!

“கௌதாரிமுனை”எனும் ஊர் கிளிநொச்சி மாவட்டத்தில் உண்டு!

“குமுழமுனை” எனும் ஊர் முல்லைத்தீவில் மாவட்டத்தில் உண்டு!

“பள்ளிமுனை”எனும் ஊர்
மன்னார் மாவட்டத்தில் உண்டு!

“தங்காலை” எனும் ஊர் அம்பாந்தோட்டை மாவட்டத்தில் உண்டு!

“வங்காலை”எனும் ஊர்
மன்னார் மாவட்டத்தில் உண்டு!

“சில்லாலை”எனும் ஊர்
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் உண்டு

“அம்பனை” எனும் ஊர்
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் உண்டு!

“தம்பனை” எனும் ஊர்
வவுனியா மாவட்டத்தில் உண்டு!

‘வெளி’களுடன் ‘முனை’களும்
‘ஆலை’களுடன் ‘பனை’களும்
ஒன்றுபட்டே நிமிர்ந்தே நிற்கின்றன!

‘வெளி’கள் எங்கும் செங்காந்தள் இன்றும் மலர்ந்து கொண்டே இருக்கின்றன!

‘முனை’கள் எல்லாமே இன்றும் முனைப்புடனேயே இருக்கின்றன!

‘ஆலை’கள் எங்கும் ஆயுத உற்பத்தி நடந்து கொண்டேதான் இருக்கின்றன!

‘பனை’கள் எல்லாம் செந்தமிழ் வீரர்கள் போல புயல்காற்று அடித்தாலும் அச்சப்படேன் என நிமிர்ந்தே நிற்கின்றன!

ஆம்,

மண் இன்னமும் இன்னமும் இணைந்தே கிடக்கி(ன்ற)து!

மனங்கள் மட்டும் பிரிந்தே கிடக்கி(ன்ற)து!

வேரினை புரிந்திடுவோம்!

ஊரினை கூட்டிடுவோம்!!

தேரினை இழுத்திடுவோம்!!

– வயவையூர் அறத்தலைவன் –