மருத்துவமானி சத்திரசிகிச்சைமானி கற்கைநெறியை கற்க ஆரம்பிக்கும் போது முதல் இரண்டு வருடங்களும் கற்கும் மூன்று பாடங்களில் ஒன்று உடற்றொழிலியல் (Physiology) ஆகும்.
அந்த பாடத்தில் ஆரோக்கியமான ஒரு மனித உடலின் செயற்பாடு குறித்தே படிப்பிக்கப்படும்.
ஆரோக்கியமான ஒரு மனிதன் எனும் போது அவரின் நியம எடை,உயரம், குருதி அமுக்கம்,நாடித்துடிப்பு, சுவாசவீதம் எவ்வளவு என்பதான் முதன் முதலில் படிப்பிக்கப்படுவதுண்டு.
மனித உடல் தொழிற்படும் போது நாடித்துடிப்பு, சுவாசம், குருதியமுக்கம் ஆகியன எவ்வாறு மாற்றம் அடையும் அல்லது எந்த அளவுக்கு மாற்றம் அடையும் என்பது குறித்து படித்த பின்னரே ஆழமாய்,அகலமாய், நுண்ணியமாய் அந்த பாடம் பரந்து விரிந்து செல்லும்..!
உடற்றொழிலியல் (Physiology) விரிவுரைகள் நிறைவடைந்தவுடன் எடை, உயரம், நாடித்துடிப்பு வீதம் குருதி அமுக்கம் போன்ற நாங்கள் எங்களுக்குள் மாறி மாறி அளவிட்ட போது ஒரு தாழ்வு மனப்பான்மையே (Inferiority complex) ஏற்பட்டது.
நாற்பது கிலோ எடை கொண்ட எந்தன் தோழி ஒருத்தியின் குருதியமுக்கம் 90/60 mm Hg என பரிசோதித்தறிந்த அவள் அழுதேவிட்டாள்.
எமது விரிவுரையாளருக்கு நாங்கள் எங்கள் மனக்கிடக்கைகளை வெளியிட்ட போது அவர் சிரித்துவிட்டு “நீங்கள் படிப்பதெல்லாம் வெள்ளை இனத்தவர்கள் எழுதிய பொத்தகங்கள்.
குறிப்பாக அமெரிக்கர்கள் எழுதிய பொத்தங்களில் அவர்களது நியம எடை, உயரம், குருதியமுக்கம் மாறுபடுகின்றது” என ஆறுதலும் சொன்னார்.
ஆறுதல் கிடைத்தாலும் நாங்கள் ஆறவில்லை.
இந்த நிலையில்தான் ஒரு முறை எங்கள் மூத்த வைத்தியருடன் ஒரு மூத்த தளபதி பிரிகேடியர் ஜெயம் அவர்களின் தலைமையிலான படையணிக்கு மருத்துவ பரிசோதனையில் (Medical checkup) ஈடுபட்டிருந்தோம்.
மேலங்கிகளை ( Shirts 👔) களைந்துவிட்டு காணரும் வீரர்கள் பலர் ஒற்றை வரிசையில் வந்து கொண்டிருந்தனர்.
அந்த வரிசையில் தானும் ஒருவராக ஒரு உயர்ந்த மனிதர் வந்தார்.
அவர் நினைத்திருந்தால் வரிசையில் நிற்காமல் நேரடியாக எங்கள் மூத்த வைத்தியரிடமே தன்னை பரிசோதித்திருக்கலாம் ஆனால் மாறாக அந்த நீண்ட வரிசையில் தானும் ஒருவனான நின்றதுடன் இளையவன் அடியேனிடமே அந்த உயர்ந்த மனிதன் வந்ததால் ஆனந்தம் அடைந்தேன்.
மேலும் அவரது எடை, உயரம், குருதியமுக்கம் ஆகியவற்றினை பரிசோதித்த போது பேரானந்தம் அடைந்தேன். காரணம் எல்லாமே நியம அளவின்படியே (Standard) உள்ளதாலும் உடல்லாலும் உயர்ந்த அந்த மனிதனிடம் காணப்பட்டது.
ஆம்,
உடலாலும் உள்ளத்தாலும் உயர்ந்த மனிதன் பிரிகேடியர் ஜெயம்🎖 ஆவார்!❤️
An another man of valour of our soil.