மலர் கண்டு மலராத மானுடர்கள் இல்லை இம் மாநிலத்தே! – அதிலும்
‘பாக்களில்’ இடம் பிடித்த ‘பூக்கள்’ எங்கள் மனங்களில் நீங்கா இடம்பிடித்தவை.
(01.)பூசணிப்’பூ’
வாசலிலே பூசணிப்பூ வச்சிப்புட்டா வச்சிப்புட்டா நேசத்திலே
என் மனசை தச்சிப்புட்டா தச்சிப்புட்டா..
(02.)செந்தாழம்’பூ’
‘செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல் என் மீது மோதுதம்மா….’
(03.)செவ்வந்திப்’பூ’
‘செவ்வந்திப் பூவெடுத்து அதில் உன் முகம் பாத்திருந்தேன்….’
(04.)குறிஞ்சிப் “பூ”
மலரே குறிஞ்சி மலரே
மலரே குறிஞ்சி மலரே
தலைவன் சூட நீ மலர்ந்தாய்…
(05.) தாமரைப்”பூ”
தண்ணீரிலே தாமரைப் பூ
தள்ளாடுதே அலைகளிலே…
மேலே உள்ளவை தற்கால சினியிசையில் இடம் பெற்றவை.
சினியிசையைவிட முத்தான எங்கள் மூத்த தமிழிசையிலும் 99 வகையான பூக்கள் இடம் பிடித்து உள்ளன.
ஆம்,
சங்ககாலப் புலவராகிய கபிலரின் குறிஞ்சிப் பாடல்களிலும் மலர்ந்து
இலக்கியத்திலும் மணம் வீசும்
99 வகையான மலர்கள் உள்ளன.
அந்த சங்ககால மலர்களில் எங்கள் காந்தளும்(கார்த்திகைப்பூ) ஒருத்தி!