குதிரைப்படை வீரர்களின் வழித்தோன்றல்களில் 
வீரயுகத்தைப் புதுப்பித்த பெருவீரன் முருகதாஷ்!



குதிரைப் படை வீரர்களின் வழித்தோன்றல்களில்
வீரயுகத்தை புதுப்பித்த பெருவீரன் முருகதாஷ்!

வயவையூரின் வடக்கு வாசலில்(பலாலி)
இராணுவ வாகன இரைச்சல் கேட்டவுடனேயே நாங்கள்…
திடற்புலம் தாண்டிட்ட பொழுதுகளிலெல்லாம்,
திடமாக நின்று போரிட்ட ஆற்றலை, பேராண்மையை
உனக்குத் தந்தது யாரண்ணா?

நீயழைந்த காற்றிலும்
நீயழைந்த எம் புழுதியிலும்
நின் வீரம் பின்னாளில்
விதையாக விதைக்கப்பட்டது.


அந்த வீரவிதைகள்
விருட்சங்களான போது,…

செங்கதிரெனும் வீரநாச்சி
வயவையிலிருந்து எழுந்து புயலாகி
ஆனையிறவில் காவியமானாள்.

துரையெனும் வீரன் (கப்டன் துரை)
வயவையிலிருந்து எழுந்து புலியாகி
“புலிப்பாய்ச்சல் நடவடிக்கை”க்காக
சித்தங்கேணியில் காவியமானான்.

ஐயனெனும்(லெப் கேணல் ஐயன்) பெருவீரன்
வயவையிலிருந்து எழுந்து புலியாகி
சமர்க்களநாயகனின் பெருவிழுதாகி
“சாள்ஷ் அன்ரனி படையணியின்” தலைவனாகி
மன்னாரில் காவியமானான்.

ரவாஷெனும்(வீரவெங்கை ரவாஷ்)வீரன் எழுந்து
கனலாகி களம் பல கண்ட
யாழ் கோட்டையில் காவியமானான்.

கொற்றவனெனும்(மேஜர் கொற்றவன்)எனும் வீரன் எழுந்து
பேரலையாகி கடலிலே காவியமானான்.

கலையரசனெனும்(அறத்திரையன்) வீரன் எழுந்து கனலாகி
தமிழன் தலை நகராம் திருமலையில் காவியமானான்…..

ஆக்கிரமிப்பை அடிக்கடி சந்தித்த வயவையிலிருந்து
புலியாகி,புயலாகி, பேரலையாகி, கனலாகி களம் பல கண்டு
காவியமானவர்கள் பட்டியல் பென்னம்பெரியது.

வயவை அன்னையின் மைந்தர்கள்
இவர்களுடன் தமிழீழ தாய் நிலத்தின்
இன்னும் பல காணரும் வீரர்கள்
வீரசுவர்க்கத்தில் உன்னருகில் இருப்பதை யாம் அறிவோம் அண்ணா!

கரம் கூப்பி சிரம் தாழ்த்தி என் வீரவணக்கம் அண்ணனே!

-வயவையூர் அறத்தலைவன்-