ஞாபகங்கள் தீமூட்டுகிறது!” (NIGHT SENTRY TIME )

காண்டீபம் தூக்கும் எங்கள் கரங்களில்
கன்னங்கரிய கைக்கடிகாரங்களே அன்று கட்டப்பட்டு இருந்தன.

அடர்ந்த அடவியில்(காடு) ஒரு மணி நேரமோ இல்லை இரு மணி நேரமோ எமது காவல் கடமையை முடித்துவிட்டு அடுத்தவரை எழுப்புவதற்கு கடிகாரம் கட்டாயம் தேவைப்பட்டது.

அக்காலத்தில் வெளிவந்த சில பழைய கடிகாரங்களின் உள்ளே சின்னஞ் சிறிய மின்குமிழ் (light 💡) இருக்காது.

கைக்கடிகாரத்தில் நேரத்தினைப் பார்ப்பதற்கு #மின்சூழ் (Torch light )அடித்துப் பார்க்கவும் முடியாது.

ஆம், இரவில் காட்டில் வெளிச்சம் காட்டுவது தற்கொலைக்கு சமனானது.

ஆகவே எந்த விதமான பெரிய வெளிச்சத்தையும் கடிகாரத்தை நோக்கிப் பாய்ச்சி நேரத்தைப் பார்க்க முடியாது.

அந்த நேரங்களில் கடிகாரத்தை பார்ப்பதற்கு உதவுபவை “மின்மினிப்பூச்சிகள்” ஆகும்

பாவிக்கத் தடை விதிக்கப்பட்டதால்
மறைவில் வைத்திருக்கும்
“நுளம்புத்திரி”‘களை சில வேளைகளில் வாயால் ஊதுவோம்.

ஊதும் போது வெளிவரும் சற்று கூடுதல் வெளிச்சத்தையும் பாவிப்போம்.

நாட்டில் மக்கள் நிம்மதியாகத் தூங்க நாங்கள் காட்டில் விழித்திருந்த “நள்ளிரவு”கள் யாவுமே எம் வாழ்வின் “நல்லிரவு”கள் ஆகும்!

(“ஞாபகங்கள் குடையாகவும்
சில வேளை மழையாகவும் இன்னும்
சில பொழுதுகள் தீமூட்டவும் செய்கின்றது!”)