சமர்க்கள நாயகனே!

புறநானுறை புத்தகத்தில் காட்டிடாமல்!
நிஜத்தில் காட்டிய எங்கள் ஆசானே!⚔️

புதுமைப் பெண்ணையும் நாம் பாரதியின்
புத்தகத்தில் படித்துச் சுவைத்து சலித்திடவே..

தலைவனுடன் இணைந்து இத்தாவில்  பெட்டிச்சமரில் காட்டிய வித்தகனே!

சமர் பல வென்ற வெள்ளையத் தேவனே!
சமர்க்களநாயகனே!⚔️

எதிரியின் கோட்டைக்குள் தங்ககம் அமைத்து வாசம் செய்த தீரனே!

மக்கள் மனதிலும் தங்ககம் அமைத்து  நிரந்தரமாகக் குடியிருக்கும் இனியவனே!

எதிரியும் புகழும் வல்லோனே!⚓️
எங்கள் காலத்துச் செம்பியனே!⚔️

நின் காலத்தில்
யாமும் வாழ்ந்தது பெருந்தவப் பயனே!⚓️

குறிப்புசெம்பியன் என்பது சோழரின் இன்னுமோர் பெயர் ஆகும்.

செம்பியரின் / சோழரின் ஈழப்
படையெடுப்பின் போது அவர்கள் முதன் முதல்  தரையிறங்கி படைகளை இணைத்து படை நடாத்திச் சென்ற வடமராட்சி கிழக்கில் உள்ள ஓர் ஊரை #செம்பியன்பற்று என அழைக்கப்படுகிறது.