களத்திடை வாசம் கனகாலம் செய்தவர் எங்கள் கந்தையா பாலசேகரம்🎖

 

எந்தப் பெரிய படையே தன் எதிரே அணிவகுத்து நின்றாலும் துளியேனும் அஞ்சாது போரிடும் குணாம்சத்தால் மட்டுமல்ல “பாலசேகரம்” என்ற இவர் “குலசேகரம்” வைரமுத்து பண்டார வன்னியனின் வாரிசாகவே நோக்கப்படுகின்றார்.

“லீமா” எனும் குறியீட்டுப் பெயரினால் களத்திடையே கனகாலம் வாசம் செய்த இவரின் இயற்பெயர் கந்தையா பாலசேகரம் ஆகும்.

எந்தப் பெரிய படையே தன் எதிரே அணிவகுத்து நின்றாலும் துளியேனும் அஞ்சாது போரிடும் குணாம்சத்தால் மட்டுமல்ல “பாலசேகரம்” என்ற இவர் “குலசேகரம்” வைரமுத்து பண்டார வன்னியனின் வாரிசாகவே நோக்கப்படுகின்றார்.

எங்கள் சமர்க்களநாயகன் சமர்களில் சமர்த்தன் என்பதை இந்த உலகமே அறிந்து கொண்ட ஒரு விடையம்.

எதிரிகளின் உளவுரணை உடைத்து பல சண்டைகளை வென்றார்.

அஃதே,

போராளிகளுக்கு உளவுரண் ஊட்டுவதிலும் சமர்த்தியம் மிக்கவர் ஆவார்!

பிரிகேடியர் பால்ராஜ் அவர்களின் இந்த உளவுரண் ஊட்டல் என்றுமே நல்லூட்டமாய் அமைவதால் முன்னணி வீரர்களை போலவே பின்னணியில் நின்று சேவையாற்றும் நாங்களும் எப்போதுமே காலில் சக்கரம் பூட்டியவர்களாக வேகமாக இயங்கிக் கொண்டே இருப்போம்.

உலக இராணுவ வல்லுனர்களால் வியந்துரைக்கப்படும் குடாரப்பு தரையிறக்கமும் அதைத் தொடர்ந்து ஆனையிறவுப் பெருந்தளத்துக்கான விநியோக வழிகளை(A9 நெடுஞ்சாலை) துண்டாடி இரவு பகலாக முப்பது நான்கு (34)நாட்கள் சமராடிய அணிகளை வெற்றிகரமாக வழிநடத்திய அந்த நாட்களை செம்மொழியாக எம் மொழியாலும் இயம்பிட முடியாது.

இத்தாவில் பகுதியில் பெட்டி போன்ற வடிவில் வியூகம் அமைத்தாடிய சமரின் வெற்றியின் இரகசியங்களில் ஒன்று அவரின் கடின உழைப்பு ஆகும்.

உலகப் போரியல் வரலாற்றில்
தூக்கம் கடிந்து செயலாற்றி பல சமர்களை வென்ற பிரெஞ்சு தேசத்தின் மாவீரன் நெப்போலியன் குதிரை மீது குட்டித் தூக்கம் போட்டார்.

பிரெஞ்சு தேசத்தின் சமர்க்கள நாயகன் போலவே எங்கள் சமர்க்கள நாயகனும் தன் வாழ்நாளில் பல காலம் மிகவும் குறைந்தளவு நேரமே நித்திரை செய்யும் பழக்கம் கொண்டவர்.

விழித்திருந்த அவரது பொழுதுகளில் தனது பெரு நம்பிக்கைக்குரிய வேவுப் போராலிகளின் உதவியுடன் எதிரி மீதான வேவுத் தகவல்களை திரட்டுவதிலும் அந்த தகவல்களின் அடிப்படையில் எதிரியின் தளங்களை வரைபடமாக்கி தாக்குதல் திட்டங்களை வகுப்பதிலும் பின்னர் தலைவரிடம் சமர்ப்பிப்பித்து மேலதிக போரியல் நுடபங்களை பெறுவதிலும் செலவு செய்தார்.

அதே போல போராளிகள், இளநிலை தளபதிகள், சிறப்பு எல்லைப்படை வீரர்கள் சமர்கள நாயகன் மீது கொண்டிருந்த அதீத நம்பிகையும் பென்னம் பெரிய வெற்றியை நோக்கி தமிழரெம் வியப்பிடை நாயகனை உந்தியது.✊