பளையிலிருந்து தவழ்ந்து -அந்த வெப்பதிடல் தாண்டி வந்த உப்புக்காற்று உன்பெயரை கூறிச் சத்தமிட்டு பாடுகின்றது.
ஆனையிறவில் பொங்கிய அலையின் – புலிச்சேனையின் வீரத்தை உலகமே வியந்தது உன் வீரத்தையும் கூடத்தான்
எம்மோடு நீயிருந்த காலங்களையெல்லாம் கண்ணீரோடு நாம் எண்ணிப் பார்க்கின்றோம்!
பலவருடங்களாக உன் சேவை
விடுதலைப் பாதைக்கு குடைபிடித்திருக்கின்றது அண்ணன் சேவையில் நிரந்தரமாய் இணையுமுன்னரே சுதந்திரப் பறவைகளாய் எதிரியின் கரங்களுக்குள்ளாக புலிகளுக்கு பெரும்பணி செய்தவள் – நீ
அதன் பின்னரோ மருத்துவத்தில் உன்சேவை மகத்தானது விடுதலைப் போராட்டத்திற்காக வீர்ர்களின் உயிர்களுடன் உன் போராட்டம்
மருத்துவக் கல்லூரியின் பிறப்பிலிருந்தே கருத்துடன் உன் சேவை -அது கல்வியில் மட்டுமல்ல மாணவியரெல்லாம் பொறுப்பாளராய் விளங்கி மறவர்களின் உயிர்களையும்
காத்து நின்றாய்!
இன்று ஓயாத அலைகளாய் எழுந்தது புலிவீரம் சாய்ந்தது பகைவரென சாதிக்க விரைந்தது தலைவன் ஆயுதம் ஏந்தி அவையெனவே நீயும் ஆனையிறவை மீட்கப் பாய்தபோது தான் ஏவுகணை ஒன்று உன் உயிரைப் பறித்தது அக்கா நீ இன் நாளில் மண்ணில் வித்தாகிப் போனாலும் தமிழீழம் முழுவதுமே விழுதாகிப் போனாய் ஓயாத அலைகளாய் உன் நினைவுகள் அந்த உப்புக் கடலும் எம் உள்ளங்களும் அடித்துக் கொண்டே இருக்கும் உன் கல்லறைக்கு கண்ணீர்ப் பூக்களை மட்டுமல்ல வெற்றிப் பூக்களையும் காணிக்கையாக்கி உன்பாதையில் நாமும்…
ஆம்,
2000 ஆம் ஆண்டில் வீரசாவு அடைந்த
களமருத்துவர் மேஜர் சுமி குறித்து 2009 ஆண்டு வீரச்சாவு அடைந்த களமருத்துவர் பிரியவதான யாத்த வரிகள்!…..