தற்கொலையாளிகளாகும் சாதிப்பிரியர்கள்.

169

சாதியைக்கொண்டு சகபயணி தாக்கப்படும்போது, விரதத்தை விட்டு சாதிச்சண்டையில் இறங்க நேர்கிறது..

இனம் போல் சாதியும் ஓர் அடையாளம்; இனவழிப்புக்குக் கண்டிப்போர் சாதி அழிப்பில் தீவிரம் காட்டுவதேன்? எனும் சாதி பிடித்தவர்களை அவர்தம் கருத்தைக் கொண்டே எதிர்கொள்ள வேண்டிய நிலையை நேரத் தட்டுப்பாடு தந்து விடுகிறது. 

தன்னையும் தன்னுடையதையும் உயர்வாக எண்ணும் உரிமை மட்டும் கொண்ட மனிதன்,  இன்னொருவரையும், இன்னொருவருடையதையும் இழிக்கும் உரிமையற்றவன். அப்படியிருக்க குறைந்த சாதியென எப்படிச் சொல்லலாம்.

குறித்த சாதியை உயர்சாதியெனச் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு அச்சாதியில் என்ன உண்டு? 

குறித்த சாதியை குறைந்த சாதியெனச் சொல்லுமளவுக்கு அச்சாதியில் என்ன குறை உண்டு?

பழக்க வழக்க வேறுபாடென மழுப்பல் பதிலை பலர், கையால் உண்ணும் எம்மைப் பார்த்து கரண்டியால் உண்பவன் குறைவாக நினைப்பதை தப்பில்லை என்கிறீர்களா எனக் கேட்டால் மௌனியாகி விடுகின்றனர்.

இம்மூன்று கேள்விக்கும் சாதிபேதவாதிகளிடம் பதிலில்லை.  துருப்பிடித்த சாதிக்கத்தியைக் கொண்டு தங்கள் கழுத்தை தாங்களே அறுக்க்கும் இவர்களுக்காகப் பரிதாபப்படத்தான் முடிகிறது…