அண்மையில் நியூசிலாந்தில் இரு பள்ளிவாசல்கள் மீது பயங்கரவாதத் தாக்குதல் நடைபெற்றது.
தேவாலாயங்கள் இருந்த இடத்தில் பள்ளிவாசல்கள் அமைக்கப்பட்டதால் பள்ளிவாசல்கள் மேல் தாக்குதல் நடத்தியாக தாக்குதல்தாரி தன்னிலை விளக்கம் அளித்துவிட்டு தாக்குதல் நடத்தியுள்ளான்.
வணக்கஸ்தலம் இருந்த இடத்தில் இன்னொரு வணக்கஸ்தலம் அமைக்க மட்டும் நியூசிலாந்துச் சட்டம் அனுமதித்தால், கைவிடப்பட்ட தேவாலயக் காணிகளை விலைக்கு வாங்கி பள்ளி வாசல்கள் அமைக்கப்பட்டதாக நியூசிலாந்தில் வாழும் ஊடக நண்பர் உறுதிப்படுத்தியுள்ளார்.
இதைச் சாட்டாக்கி நியூசிலாந்தின் அமைதி குலைக்கப்பட்டுள்ளது. தீவிரவாதத்தின் கரம் நியூசிலாந்தையும் தொட்டுள்ளது.
இந்நிலையில், இந்து ஆலயங்கள் அழிக்கப்பட்டு தேவாலயங்கள் அமைக்கப்பட்டன எனவும் இந்து ஆலயக் காணிகளில் தேவாலயங்கள் அமைக்கப்பட்டன எனவும் தமிழ் மக்கள் மத்தியில் செய்யப்படும் பரப்புரை மனதில் பயத்தைப் பிறப்பிக்கிறது.