வானத்தை அளந்து பார்க்கலாம் வாங்க – செவ்வாய் (வீனஸ்)

செவ்வாயைப் பற்றி இனி பார்ப்போம்.

செவ்வாயின் குறுக்களவு 6794 கி,மீ. அதாவது இது பூமியில் சரிபாதி.. ஆனால் நிலாவை விட இருமடங்கு.

இது சூரியனை ஒருமுறைச் சுற்றிவர 687 நாட்கள் ஆகுது. இதுவும் நீள் வட்டப் பாதையில்தான் சுற்றி வருது. ஆனால் இந்த நீள் வட்டப் பாதை பூமியோட நீள் வட்டப் பாதைக்கு ஒப்பிட்டால் இன்னும் நீள்வட்டமானது

அதாவது…

பூமிக்கும் சூரியனுக்கும் குறைந்த பட்ச தூரம் : 147 mil.km.
பூமிக்கும் செவ்வாய்க்கும் அதிகபட்ச தூரம் : 152 mil. km

ஆனால்

செவ்வாய்க்கும் சூரியனுக்கும் குறைந்த பட்ச தூரம் : 206 mil km
செவ்வாய்க்கும் சூரியனுக்கும் அதிகபட்ச தூரம் : 249 mil. km

இன்னொரு விஷயம். பூமி எப்படி தன் அச்சில் 23.5 டிகிரி சாஞ்சிருக்கோ அப்படி..
செவ்வாய் 25 டிகிரி சாஞ்சிருக்கு..

இப்படி சாஞ்சி இருக்கறதால செவ்வாயிலும் கோடைக்காலம் குளிர்காலம் உண்டு. வடதுருவத்திலும், தென் துருவத்திலும் பனிப்படலம் உண்டு.. தூசுப் புயல் உண்டு..

பூமியோட பாதை சற்றே நீள்வட்டமா இருப்பதால் வடதுருவ கோடைக்காலத்திற்கும், தென் துருவ கோடைக்காலத்துக்கும் அதிக வித்தியாசம் இருப்பதில்லை. ஆனால் செவ்வாயின் சுற்றுப் பாதை ரொம்பவே நீள் வட்டமா இருப்பதால் தென் துருவத்தின் கோடைக்காலம் வடதுருவத்தோட கோடைக் காலத்தை விட 25 நாட்கள் சின்னது..

அதே மாதிரி சூரிய வெப்பமும் மாறும். தென் துருவ கோடைக்காலத்தின் போது சூரியனுக்கு அருகில் இருப்பதால் ரொம்பவே பிரகாசமா இருக்கும். அதனால புழுதிப் புயல் தெரியும். சில ச்மயம் வெண்மேகங்களும் தெரிவது உண்டு…

பூமியை மாதிரியே செவ்வாயும் தன்னைத் தானே சுத்திக்குது. அதுக்கு ஆகும் காலம் 1 நாள் 37 நிமிஷம் ஆகுது. ஆனா சூரியன் உச்சியில் இருப்பதில் இருந்து சூரிய உச்சியில் வருவதற்கு கணக்கெடுத்தா 24 மணிநேரம் 39 நிமிஷம் ஆகும். காரணம் சூரியனைச் சுற்றுவது.

செவ்வாயை தொலைநோக்கியில் பார்த்தால் காவி நிற கோளமாகத் தெரியும். அதன் வட துருவத்திலும் தெந்துருவத்திலும் வென்பனியையும் காணலாம்.இருட்டுப் பகுதியில் கொஞ்சம் பச்சையாய் தெரியும். கால்வாய்கள் இருக்கிற மாதிரியும் தெரியும். வெயில் காலத்தில் செவ்வாயில் புயல்கள் நகர்வதும் தெரியும்.

இதையெல்லாம் பார்த்துட்டுதான் செவ்வாயில் உயிரினங்கள் இருக்கு என்ற ஆழமான நம்பிக்கை மனுஷனுக்கு உண்டாச்சு..

அதனால அதை ஆராய நிறைய செயற்கை கோள்கள் சென்றன…

தொடரும்