வடிந்த வெள்ளம் குடியேறிய கண்களுடன் தாயக மக்கள்.

143

ஈழத்தீவின் தமிழர் தாயகங்களில் பேரனர்த்தத்தை தந்து சென்றுள்ளது வெள்ளப்பெருக்கு. கிளிநொச்சி, முல்லை மாவட்டங்கள் ஊடக வெளிச்சம் பட்டுக் கொஞ்சம் மூச்சு விட்டாலும், அம்மக்களின் அவல வாழ்வு பெருவெள்ளத்தைப் போல் வடிந்து போகவில்லை. அவர்கள் கண்ணீராக வடிந்த வண்ணமே உள்ளன. அவர்கள் நிலையே அப்படி என்றால் பெரிதளவில் பேசப்படாத மன்னார் மாவட்டத்தின் நிலை….?

நிலமை இவ்வாறு இருக்க உதவிக்கு வந்தோர் வராதோரைப் பட்டியலிடுவதும், எட்டிப்பார்ப்போர் முகத்திரையைக் கிழிக்கிறேன் பாரென பதிவுகளிடுவதுமாக வெட்டிப்பொழுதுகளைக் கடந்து, விருப்பமின்றியே இதை பதிவிடுறேன்.

ஶ்ரீலங்கா இராணுவத்தின் உதவியோ, சிங்கள மக்கள்/அரசியல்வாதிகள் உதவியோ இந்நேரத்தில் அவசியமானதே. அவர்கள் உள்நோக்கத்துடன் உதவினாலும் அதை இப்போ உரித்துக் காட்ட வேண்டிய தேவை இல்லை.

அதே போல் எட்டியே பார்க்காத தமிழரசியல்வாதிகளைச் சுட்டிக்காட்ட வேண்டிய நேரமும் இதுவல்ல. 

உண்மையில் இவ்வாறு செய்யும் நாங்கள்தான் அவர்களை விட பெரியளவில் அரசியல் செத்கின்றோம்.

இவற்றுக்கு விரயமாக்கும் நேரத்தை வெள்ளம் வடிந்த பின்னும் கண்ணீர் வடித்தவாறு வாழும் எங்கள் மக்களின் மீளெழுச்சிக்கு உதவச் செலவிடலாம்.

இது தொடர்பாக இன்னும் அதிகம் கதைக்கலாம். ஆனால் அந்நேரத்தை அம்மக்களுக்கு உதவும் வண்ணம் செலவிடலாமெனக் கருதி நிறைவுறுகிறது இப்பதிவு.