பூமியைப் போலவே இரும்பு உட்கரு, பாறைக் குழம்பு மற்றும் மேலோடு போல மூணு அடுக்காகத்தான் செவ்வாயும் அமைந்திருக்கும் என நம்பப்படுகிறது. ஆனால் உட்கரு மிகவும் சிறியதாக இருக்கலாம் எனக் கருதப்படுது. ஏன்னா வலிமையே இல்லாத காந்தப் புலம்.
செவ்வாய் பூமியை விட 30 சதம் அடர்த்து குறைந்த கிரகம். பூமியின் மேலோட்டுத்தகடுகளைப் போல செவ்வாயின் அமைப்பில் தக்டுகள் இல்லை அப்படின்னு நம்பறாங்க. ஆனால் செவ்வாயில் பீடபூமிகள், பள்ளத்தாக்குகள், எரிமலைகள் எல்லாம் இருக்கு.
மேலே உள்ள எரிமலையின் பேரு ஒலிம்பஸ் மான்ஸ். இது செவ்வாயில் உள்ள மிகப் பெரிய எரிமலை. இதன் விட்டம் 624 கிமீ. உயரம் 25 கி.மீ. (நம்ம எவெரெஸ்ட் உயரம் 8+ கிமீ)
மேலே உள்ளது செவ்வாயின் வட துருவம். இந்தப் பனிப்படலத்தில் உறைந்த நீரும் கரியமில வாயுவும் இருப்பதாக எண்ணுகிறார்கள் விஞ்ஞானிகள்.
செவ்வாயின் மீதுள்ள வளிமண்டலம் மெல்லியது. இதில் கரியமில வாயுதான் 95% உள்ளது. நைட்ரஜன், ஆர்கான், ஆக்சிஜன் ஆகியவை மிகக் குறைந்த அளவில் உள்ளன.
வளிமண்டலத்தில் சிவப்பு வர்ணம் சிதறடிக்கப்படுவது படத்தில் அபாரமாக தெரியுமே
அடுத்து மனிதன் இந்த கிரகத்தை ஆராய எடுத்துக் கொண்ட முயற்சிகளையும் பார்ப்போம்.