அண்மையில் விடுவிக்கப்பட்டு, துரித கதியில் திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் வயாவிளான் தெற்கு ஞானவைரவர் ஆலயத்தின் திருத்தத் திருப்பணிக்காக பிரான்சில் இயங்கும் வயாவிளான் மக்கள் ஒன்றியம் ரூபாய் பத்தாயிரத்தை திருப்பணி நன்கொடையாக வழங்கி உள்ளனர்.
ஊர் மக்கள் ஒன்று கூடிச் செய்ய வேண்டியவை ஆலயத் திருப்பணிகள். இவ்வாறு வயவன்கள் ஒன்று பட்டுச் செய்த ஆலயத் திருப்பணிகளின் நல்விளைவாக வயவையூரின் பல தேவாலயங்கள் புதுப்பொலிவு பெற்று வயவையூரின் அலங்காரத்துக்கு அணியாகி உள்ளன.
அவ்வரிசையில் வயவையூரின் தென்பகுதியில் உள்ள, கிருபானந்த வாரியார் ஆன்மீகச் சொற்பொழிவாற்றிய பெருமைக்குரிய ஞானவைரவர் ஆலயமும் வயவை மண்ணை அலங்கரிக்கத் தயாராகி வருகிறது.
ஆம். அவ்வாலயத்தின் திருத்தத் திருப்பணிகள் துரித கதியில் நடைபெற்று வருகிறது. இத்திருப்பணிக்கு உதவும் பொருட்டு ரூபாய் பத்தாயிரத்தை வழங்கி ஊரின் எழுச்சிக்கு உழைக்கும் அமைப்பு என மீண்டும் நிரூபித்துள்ளது வயாவிளான் மக்கள் ஒன்றியம் – பிரான்சு.
அவ்வமைப்பின் இப்பணிக்கு வயவன் இணையத்தின் பாராட்டுகள்.