போடா எல்லாம் விட்டுத் தள்ளு பழசை எல்லாம் சுட்டுத்தள்ளு

557

மணியும் ராசாவும் இணை அப்படி ஒரு பொருத்தம்..  பகல் நிலவாக உதித்த நட்பு தளபதியுடன் மறைந்து விட்டது..

பகல் நிலவு சாட்சியாக

இதயக் கோவிலில் மௌனராகம் பாடி

தென்றலை மன்றம் அழைத்து வந்து

தென்பாண்டிச் சீமையிலே

நின்னுகோரி வர்ணம் இசைக்க

சந்த வரிகளைப் போட்டு சொல்லிக் கொடுத்தது காற்று

மாலையில் யாரோ மனசோடு பேச

அஞ்சலிப்பாப்பா மனசை அள்ள

காட்டுக்குயிலு மனசுக்குள்ள பாட்டுக் கென்றும் பஞ்சமில்லை என்று ஆனந்திக்க

வந்தது போகி.. மணி மான் சொந்தம் ரோஜாவாக மலர மணியும் ராஜாவும் தனியாக..

காட்டுக்குயிலு பாட்டில ஒரு சிறப்பு..

மணிரத்தினம், இளையராஜா கூட்டணியுடன் எஸ்.பி.பாலுவும் ஏசுதாசும் இந்த பாட்டில் இணைந்தார்கள். இந்த பாட்டில் மட்டும்தான் இந்த இரு இமையமும் இணைந்தார்கள்..

02/06 மணிரத்தினம் இளையராஜா இருவரும் பிறந்த நாள்..