ஒற்றைத் தலைவலி

311

ஒற்றைத் தலைவலி

சில உண்மைகள்:

0

ஒரு சமயம் ஒரு பக்கம் வலிக்கும்
ஆனால், ஒருவருக்கே இடது, வலது
என மாறி மாறி வரலாம்.

0

பெயர்க்காரணம்
(உங்கள் மருத்துவருக்கே தெரியாமல் இருக்கலாம்…!)
Hemiial Headache
பாதித் தலைவலி
இதில் சில எழுத்துக்களைப் பிடுங்கி அமைத்த சொல்.
Migrainous Headache

0

ஆண்களில் 100 க்கு ஆறு பேர்
பெண்களில் 100 க்கு 15 பேர் வரை
இதனால் பாதிக்கப்படுகிறார்கள்

0

தலைவலி, குமட்டல், வாந்தி,
(நரம்பு மண்டலப் பாதிப்புகள்)
இவை வெவ்வேறு கூட்டணியில்
ஆனால் ஒரே பாணியில்
மீண்டும் மீண்டும் தாக்கும்.
(நம்ம அரசியல்வா(வியா)திகள் போலவே! )

0

தூண்டுபவை:
பசி
வெயில்/ கூசும் ஒளி
சில உணவு வகைகள் : சாக்லேட்,சைனீஸ் சமையல் உப்பு போன்ற பல
(நீங்களே சங்கர்லால் போல் துப்பறிய வேண்டும்)
மது
மாதவிலக்கு
உறக்கமில்லாமை
பெண்மை ஹார்மோன் மாத்திரைகள் (ஈஸ்ட்ரோஜென்)
கவலை
வாசனைத் திரவியங்கள்
மனச்சோர்வான நிலை (Depression)

0

தடுப்பவை:
நல்ல உறக்கம்
மகிழ்ச்சி
கர்ப்பம்
முறையான மருந்துகள்

0

காரணங்கள் :
மரபுக் காரணங்கள் (முழுதும் அறியப்படவில்லை).
சூட்சுமம் இ செல்களிலா
என்று இன்னும் ஆராய்ச்சி தொடர்கிறது…..

0

தீர்ப்பவை, தடுப்பவை என இருவகை மருந்துகள்
உண்டு. மருத்துவ ஆலோசனையின்படி இவை எடுத்து,
தூண்டுபவை தவிர்த்தும்
இந்தக் கொடும் வலியில் இருந்து விடுதலை பெற வாழ்த்துகள்