நாளொரு குறள் 23

318

ள் : 23
பால் : அறத்துப்பால்
அதிகாரம் : நீத்தார்பெருமை
செய்யுள் : 3

இருமை வகைதெரிந்து ஈண்டுஅறம் பூண்டார்
பெருமை பிறங்கிற்று உலகு.

உலகில் இருமை என்பது எங்கும் எதிலும் உண்டு. இரவு-பகல், நன்மை-தீமை, இன்பம்-துன்பம் இப்படி எதை எடுத்தாலும் அதன் முழு எதிருமான இன்னொன்றும் உலகில் உண்டு. இரண்டும் தனித்தனியே இருக்கும் என எண்ண வேண்டாம். ஒரே பொருளிலேயே இரண்டும் இருக்கும்.

உதாரணமாக உலகின் எந்த ஒரு புள்ளியையும் எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு நாள் என எடுத்துக்கொண்டால் இரவு பகல் என்பது சமமாக இருக்காது. ஆனால் ஒரு வருடம் என முழுமையாக எடுத்துக் கொண்டால் அந்தப் புள்ளியில் இரவும் பகலும் சமத்துவம் பெற ஆரம்பிக்கும். பல இலட்ச ஆண்டுகளைக் கணக்கிட்டால் இரவின் பொழுதும், பகலின் பொழுதும் சமமாகி விடும்.

அதே மாதிரி எல்லாவற்றிலும் நன்மையும் உண்டு தீமையும் உண்டு. ஒருவனுக்கு நன்மையாவது இன்னொருவனுக்கோ, இன்னொன்றிற்கோ தீமையாக இருக்கலாம். நம் அறிவுக்கெட்டியவரை நாம் அதிகம் நன்மை தருவது, அதிகம் தீமை தருவது எனப் பிரிக்கிறோம். ஒரு பொருளைப் பற்றிய நன்மைகள் நமக்கு அதிகம் தெரியாவிட்டால் அது கெட்டதாகி விடுகிறது. தீமைகள் பற்றி அதிகம் தெரியா விட்டால் அது நல்லதாகிவிடுகிறது.

ஆனால் இந்த இருமையின் வகைகளை அறிந்து தெளிந்த அறத்தைப் பின்பற்றுவோர் இருக்கிறார்களே, அவர்களின் சிறப்பே உலகில் உயர்ந்ததாகும்.

பகுத்தறிவை பல இடங்களில் வள்ளுவர் சான்றோரின் முக்கியப் பண்பாகக் காட்டுவதை காணலாம். இருமை என்பதை பலர் இம்மை, மறுமை எனச் சொல்லி இந்தக் குறளின் பொருளை மழுங்கடித்திருக்கிறார்கள். இருமை என்பது இரண்டான தன்மை