நெஞ்சில் இடியாய் வீழ்ந்த கொடுஞ்சேதிதனை முகநூல் மற்றும் சமூகவலைத் தளங்களில் கண்டும் கேட்டும் துன்பப்பட்டுக் கொண்டிருக்கின்றேன்!
வாழ வேண்டிய வசந்த காலத்தில்
உயிரைப் பறித்த காலனவனை முள்ளிவாய்க்கால் காலத்தின் மீண்டும் நொந்து கொள்கின்றேன்.
தாயகத்தின் கலை மேடைகள் எங்கும் எங்கள் திருவூரின் முகவரி சொன்ன மூத்த கலைஞர் திருமிகு தனபாலசிங்கம் அண்ணரின் திருக்கரம் பற்றி ஆறுதல் சொல்ல முடியவில்லை.
இலட்சியசீலனின் ஆன்மா சாந்திய அடைய வேண்டுகின்றேன்.
பெற்றவர்கள்,சகோதரங்கள் இந்த பேரிழப்பினை தாங்கிக் கொள்ளும் சக்தியை பெற்றிட ஞமலி ஏறிவந்து ஞாலம்தனை காக்கும் எங்கள் ஞானவைரவப் பெருமானை இறைஞ்சுகின்றேன்!🙏