கனதியான கந்தகக் காற்று எங்கள் நாசிகளை நிறைத்துக் கொண்டிருந்தன!
குண்டொலிகள் செவிப்பறைகளை ஓங்கி ஓங்கி அறைந்து கொண்டிருந்தன!
கண்கள் இரண்டும் கனகாலமாய் "கண்ணுறக்கம்" காணாததால் சிவந்து சிவந்து எரிவுணர்ச்சி கொண்டன!
1995 ஆம் ஆண்டின் இறுதி மாதங்களில்
யாழ்ப்பாணத்தின் பெரு நகரமும் அதன் வீதிகளும் வெறிச்சோடிப் போயிருந்தன!
திருநெல்வேலிச் சந்திக்கு அருகாமையில் எமது அணிகள் நிதானமாய் நிலையெடுத்து சமர் செய்து கொண்டிருக்க யாழ் பருத்தித்துறை வீதிக்கு கிழக்குப் பக்கமாய் நகர்ந்த ஶ்ரீலங்கா இராணுவம் கச்சேரியை நெருங்கியதால் எமக்கான எஞ்சியிருந்த ஒரேயொரு விநியோகப் பாதையும் இல்லை என்றானது.
இராணுவ வியூகங்களை வகுக்கும்...
அழகும் அர்த்தமும் கொட்டிப் பரவி விழிக்கு விருந்தளிக்கும் பாண்டியர் காலத்தின் சிற்பங்கள் ஒரு நாளிலோ, ஒரு மாதத்திலோ இல்லை ஒரு வருடத்தில் அமைக்கப்பட்டவை அல்ல!
மாறாக பல தசாப்த காலங்களா ஓய்வொழிச்சல் இன்றி உழைத்த எங்கள்
சிற்பக்கலைஞர்களின் கற்காவியம் ஆகும்!
தாய்த் தமிழகத்தில் அழகு ஒளிரும் "சிற்பக்காடுகள்" அமைந்துள்ள
*மாமல்லபுரத்தில்* பல ஆண்டுகள் "*உளியொலி*"கள் அல்லது "*உளியின்_ஓசை*" கேட்டுக் கொண்டேயிருந்ததாக வரலாறு ஆசிரியர்கள் அழகழகாய் கூறுகின்றார்கள்.
தமிழர்தம் மாங்கனித்தீவின் சிரசமெனத் திகழும் வடமராட்சியின் "கரவையூர்" என அழைப்படும் கரவெட்டி பகுதியில் பசுமை நிறைந்த மேய்ச்சல் நிலத்தில் அதிகம் அதிகம் மந்தை...
யாழ்ப்பாணம் இராசாவின் தோட்டத்தை சேர்ந்தவரும் பிரெஞ்சு தேசத்தில் வசித்துவந்தவருமான திரு சவரிமுத்து மனோகரன் காலமாகிய செய்தியறிந்து அவரது நண்பர்கள் ஆழ்ந்த கவலையில் ஆழ்ந்துள்ளனர்.
யாழ் மத்தியகல்லூரியின் (OBA of Jaffna central college ) பழைய மாணவனாகிய மனோகரன் தனது இளமைக்காலத்திலேயே பலரது கவனத்தையும் ஈர்கக்கூடியவராகத் திகழ்ந்து வந்தார்.
நடை உடை பழக்கவழக்கம் இசை நகைச்சுவையென எல்லோரையும் திரும்பிப்பார்க்க வைத்த சுறுசுறுப்புமிக்க இளைஞனாக எம் செம்மண்ணில் வலம் வந்தவேளை இவரைப்பற்றிய சுவாரஸ்யமான ஒரு நிகழ்வு.
அக்காலங்களில் யாழ்நகரில் நடைபெறும் இசை நிகழ்வுகளில் நித்தி கனகரட்ணம் ,...
தமிழ்தேசியத்திற்கான பாதை வலிமிகுந்தது... வேதனைகள் நிறைந்திருந்தது.. முன்பெல்லாம் தமிழ்தேசியத்திற்கான குரல் எங்கு ஒலிக்கிறதோ... அந்த இடத்தில் நாம் ஒன்றாகி நிற்போம்.. நின்றோம்...
ஆனால் இன்று ஈழத்திலும் சரி,புலத்திலும் சரி, தமிழகத்திலும் சரி மிக மோசமாக தமிழ்தேசியம் நம்மவர்களாலேயே அவமானப்படுத்தப்படுகிறது...
தமிழர்களுக்கு தமிழர்களே எதிரியாகிக்கொண்டு போகிறோம்...
இது ஒரு போதும் விடியலை பெற்றுத்தராது...
மாறாக எமை அழிக்க வேகம் கொள்ளும் ஹிந்திய, சிங்கள கூட்டாளிகளிற்கே "இனத்துக்குள் இனமுரண்பாடு" வெற்றியை கொடுத்துவிடும்...
மண் விடுதலைக்காக தம் வாழ்க்கையையே அர்ப்பணித்து உயிர்களை தியாகம் செய்த வீரர்களையும் அவர்கள் சுமந்த வேதனைகளையும் ஒரு கணம் தூய தமிழ்தேசிய சிந்தனையோடு நினைத்துப்பார்த்தால் போதும்....
எம் இனத்துக்குள் இனமான உணர்வு...
தூதாக வந்த காக்கைகளை கனத்த மனத்துடன் கலைக்க வேண்டிய கட்டாயம். தேசம் காக்க கானகத்தில் காவலர்கள் மனவலைச் சுனாமி கூட அமைதியாகத்தான் அடிக்கும்.
மணலாறு காட்டுக்குள்ளே அமைக்கப்பட்டிருந்த "மைக்கல்பேஷ்" என்ற அந்த முகாம் அழிவடைந்திருந்தாலும் அழகாய் இருந்தது.
"மின்னல் சண்டை" நடைபெற்ற காலத்தில் அந்த முகாம் வரை ஶ்ரீலங்கா இராணுவம் வந்து போயிருந்தது.
விமானத் தாக்குதலும் பலமாக "மைக்கல் முகாம்" மீது நடைபெற்ற காரணத்தால் அந்தப் பகுதியில் மரங்கள் பல அழிவடைந்ததால் ஒரு சின்னஞ் சிறிய வெட்டையும் ஆங்கு காணப்பட்டது.
வானுயர்ந்த பென்னம் பெரிய ஓரிரு பாலைமரங்கள் உட்பட...
தமிழர்களின் நிழலரசோ அல்லது அந்த அரசைக் கட்டியமைத்து ஆளுகை செய்த விடுதலைப் புலிகள் அமைப்போ எந்த ஒரு மதத்துக்கும் சார்பானது அல்ல!
அதே நேரம் தனிப்பட்ட ரீதியாக புலி உறுப்பினர்கள் கொண்டிருந்த மத நம்பிக்கைக்கைகளை ஒரு போதும் இடையூறு செய்யவோ அல்லது தகர்க்கவோ இல்லை!
யாழ்ப்பாண மாவட்டத்தின் தெற்கே குருநகர் எனும் தமிழர்தம் தொல்லூரின் கடலோரம் அருளாட்சி புரியும் வேளாங்கன்னி மாதா ஆலயம் மிகவும் அற்புதமானதும் அழகானதும் ஆகும்.
நீண்ட காலத்தின் பின்னர் அன்னையின் தேவாலயம் விழிகளின் வழி நுழைந்த போது எந்தன் நினைவுப் பெட்டகம் மெல்ல திறந்து...
1974 ஆம் ஆண்டு மற்றும் 1975,1976 ஆகிய ஆண்டுகளில் அவதரித்த எந்தன் நண்பர்களில் பலருக்கு ஒரு பொதுவான பெயரே இருந்தது!
வீரசுதந்திரம் வேண்டி நின்ற தமிழர்களைப் பொறுத்த வரையில் அது ஒரு புனிதமான பொதுப்பெயர் ஆகும்!
அந்தப் புனிதமான பொதுப் பெயர் "சிவகுமாரன்" ஆகும்.
சில பெற்றோர்கள் "சிவகுமாரன்" எனும் பெயரின் கடையெழுத்தைச் சிறிது மாற்றி சிவகுமார் எனவும் அக்கால கட்டத்தில் பெயர் வைத்திருந்தார்கள்.
ஒரே வகுப்பில் பல "சிவகுமாரன்"கள் இருந்ததால் நாங்கள் அவர்களை வித்தியாசப்படுத்த...
01)வெள்ளைச் சிவகுமாரன்
02)கறுத்தைச் சிவகுமாரன்
03)கட்டைச் சிவகுமாரன்
என அழைப்பதுண்டு.
சில வேளைகளில் ஊர்பெயரை நண்பர்களின் பெயரின் முன்னே...
கன்னித் தமிழ் தவழும்- எம்
கன்னங்குடாவில்...
கெட்டியான
கட்டித் தயிரை
கொட்டித் தரும் இந்த..
எருமைத்தாயின் மடியும் - எந்தன்...
சொந்தமடிகிளியே!✊
"மீனகங்களை"யும்
"தேனகங்களை"யும் கொண்டு
இலங்கும் எம் மட்டு மண்ணின்...பெரும்...
சொத்தடிகிளியே!!✊
கன்னங்கரிய காரிருள்தனிலே...
பகைப்புலம் தேடிய பொழுதுகளில்
எருமைத் தாயோடு மோதி வீழ்ந்த
பசுமை நினைவுகள்
நெஞ்சினிலே தமிழ் நெஞ்சினிலே
கொட்டுதடிகிளியே!!!✊
- அறத்தலைவன் -
2008 ஆம் ஆண்டின் இறுதி மாதங்களில் கிளிநொச்சியில் இருந்து மக்கள் இடம்பெயர்ந்து கொண்டிருக்கும் போதே உணவுத் தட்டுப்பாடும் மெல்ல தலை தூக்கத் தொடங்கிவிட்டது.
பரந்தனைப் பிடித்த வெறிபிடித்த இராணுவம் வெகுவேகமாக முரசுமோட்டையைத் தாண்டி தருமபுரம் பகுதிக்குள்ளே நுழைந்த போது விசுவமடு வீட்டிலிருந்து அவசரமாக ஓடிச் சென்று மூங்கிலாறுக் கிராமத்தில் ஒரு சோளத் தோட்டத்தில் எனது மனைவி அம்மா, அப்பாவுடன் சகோதரங்களுடன் இருந்தாள்.
விசுவமடு வீட்டுக்கு மீண்டும் சென்று உணவுப் பொருட்களை எடுத்துவரச் சென்ற மாமா, மச்சானை காவல் கடமையிலிருந்த போராளிகள் தடுத்து நிறுத்தி அனுப்பிவிட்டனர்.
வைத்தியசாலைகளிலேயே இரவு...
அழகால் மாந்தரை ஆளும்
அற்புதமே!🦌
மனதை மயக்கும்
மானினமே! 🦌
மாங்கனித்தீவின் உய(யி)ர்
மரகதமே!🦌
புள்ளிகள் கொண்ட
பூங்கவிதையே! 🦌
துள்ளி ஓடும் - பொற்
சித்திரமே! 🦌
காட்டிலே வாழ்ந்தாலும்- காதல்
பாட்டிலே வந்து பெண்ணை அலங்கரிக்கும்
பதுமையே! 🦌
ஐய்யகோ!🥲
ஐயர் அமர-உந்தன்
தோல் வேண்டுமாம்!
உப்புடன் சாம்பலிட்டு
உவப்புடன்-உந்தன்
தோலினை பதப்படுத்தும் எந்தன்
தோழனின் மனதினை,
மதம் பதப்படுத்தவில்லையே!🤔