26.6 C
Jaffna
Tuesday, December 3, 2024
வயாவிளான் தெற்கைப் பிறப்பிடமாகவும் வாழிடமாகவும் கொண்ட கந்தையா பொன்னம்பலம் அவர்கள் மட்டுவிலில் காலமாகிவிட்டார். என்ற பெருந்துயரச்செய்தியை அறியத்தருகின்றோம். அன்னார் அமரர்களான ஆவரங்கால் வ.சி கந்தையா, செல்லம்மா தம்பதிகளின் இளைய மகனும், நேசமலர் அவர்களின் அன்புக் கணவரும் அமரர் க. தருமதுரை அவர்களின் சகோதரனும், காண்டீபன், தேவாஞ்சலி, பவளாஞ்சலி ஆகியோரின் பாசமிகு தந்தையும், சிற்சபேசன், மலரினி, துஷ்யந்தன், தர்சன், ஆகியோரின் சிறிய தந்தையும் ஆவார், அன்னாரின் பிரிவுத் துயர் பகிர்வதோடு அன்னாருக்கு எமது ஆத்மாஞ்சலிகள்.  
காங்கேயனூர் 'கேதீஷ்வரன்' தொண்ணூறாம் ஆண்டில் 'மலரவன்' ஆகினன்! அஃதே, தெல்லியூர் 'கலாரூபி' தொண்ணூற்றியாறாம் ஆண்டில் 'பிரியவதானா' ஆகினள்! தாரளமாய் தன்னலம் கருதாது தமிழரினம் தளைத்தோங்கிட கண் துஞ்சாது உழைத்தனர்! மெய்வருத்தம் பாராது; அல்லும் பகலும் மகத்தான மருத்துவப்பணி புரிந்தனர்! இலட்சியத்தால் ஒருமித்தவர்கள் - பின்னாளில் கருத்தில் ஒருமித்த காதலரும் ஆகினர்! புதுக்குடியிருப்பூரில்இரண்டாயிரத்தியோராம் ஆண்டில் கைத்தலம் பற்றியே காணரும் மண இணையரும் ஆகினர்! தமிழூர்கள் எல்லாம் தங்கள் பொற்தடங்கள் பதித்தே கிரிவலம் வந்து இன்னுயிர்கள் பல காத்தனர்! எம்மவர் உயிரும் காத்தனர்! தமிழர்தம் உயர் விழுமியமாய் எதிரியின் உயிரும் காத்தனர்! உயிர் காத்திடும் அதியுன்னத தங்கள் பணியிலேயே...
சகோதர மொழியினைத் தாய்மொழியாகக் கொண்ட அவன் "மதவாச்சி"யைச் சேர்ந்தவன்! தனது தாய் மொழியுடன் ஆங்கிலமும் கொச்சைத் தமிழும் கதைக்கத் தெரிந்தவனாய் எனக்கு அறிமுகமானான்! கொச்சைத்தமிழ் பேசிய அவனுக்குப் பச்சைத்தமிழைப் பேச யானும் வேறு சில நண்பர்களும் கற்றுக் கொடுத்தோம்! அவனிடம் யான் பழகிய சிங்களம் குறைவாக இருந்தாலும் நிறைவான பண்பான தமிழை அவனுக்குக் கற்றுக் கொடுத்தேன்! கற்றுக் கொண்ட தமிழ் மூலம் பல நல்ல தமிழ்பேசும் நண்பர்களை அவன் சம்பாதித்துக் கொண்டான்! ஒரு நாள் அவன் வேர்க்க விறுவிறுக்க ஓர் ஒளிப்படத்துடன் என்னிடம் வந்தான்! யான் அதை வாங்கிப் பார்த்தேன்...! ஒளிகொண்ட அந்த...
"நல்ல நாள் என கருதி ஒரு நாளை தெரிவு செய்து அந்நாளில் தங்கள் குழந்தைகளுக்கு பல்வேறு எதிர்பார்ப்புகளுடன் கல்வியில் சிறந்து விளங்குவர் என பெற்றோர் ஏடு தொடக்குகின்றனர். கல்வியில் அல்லது பதவிகளில் உயர் நிலையில் இருப்பவர்களை ஏடு தொடக்குவதற்காக அணுகுகின்றனர். ஒரு குழந்தையின் எதிர்காலம் ஏடு தொடக்கியவர்களால் தீர்மானிக்கப்படுவதில்லை. பெற்றோர்களே, பதவிகளில் இருப்பவர்கள் தற்போது தமது கடமைகளை புனிதமான முறையில் செய்வதில்லை. ஆகவே நீங்கள் அவர்களை நாடிச் செல்வதில் எது வித அர்த்தமும் இல்லை. ஒரு குழந்தையின் எதிர்காலத்தில் தாய் தகப்னை விட வேறொருவருக்கு அதிக அக்கறை இருக்க முடியாது. ஆகவே...
கட்டாய ஆட்சேர்ப்புக் குறித்து பல விதமான கருத்துக்களை வெளியிடும் பலருக்கு "கட்டாய வாசிப்பு"குறித்து தலைவர் விடுத்த உத்தரவு தெரிய வாய்ப்பில்லை. "வரலாறு எனது வழிகாட்டி"என உரைத்த தலைவர் தமிழினத்தின் வல்ல வரலாறுதனை தனது மக்களும் போராளிகளும் அறிந்து கொள்ள வேண்டும் என ஆழமாய் விரும்பினார். 1993 ஆம் ஆண்டளவில் தலைவர் தளபதிகளுடனும் முக்கிய பொறுப்பாளர்களுடனும் கதைக்கும் போது வரலாற்று நாவல்களை வாசியுங்கள் எனக் கண்டிப்பும்...
மூத்த போராளி மருத்துவர் தணிகை இவர் யார் , எதுவாக இருந்தார் எமது மண்ணுக்கும் மக்களுக்குமான இவரது பணிகள் எத்தகையன இவர் எதைச் சிந்தித்தார் எதைச் செயலாற்றுகிறார் என்பது பற்றி எமது மூத்த போராளிகள் பலரும் மக்களும் அவரோடு நெருங்கிப் பழகும் நாமும் தெளிவாக அறிவோம் . நிற்க! முகம் மறைத்து உலாவும் முகநூல் மேதாவிகளுக்கும், கட்சிகளின் பின்னால் காவடி தூக்குபவர்களுக்கும், யு ரியூப்பில் புலி பார்த்தவர்களுக்கும் என்ன அருகதை இருக்கிறது இவர் போன்றோரை விமர்சிக்க.. இன்றும் இவர் போல் பல போராளிகள் உடல் சுமக்கும் இரும்புத்துகள்களோடு...
"கற்றாரைக் கற்றோரே காமுறுவர்!" என மூதுரை அறிவுபூர்வாய் அழகழகாய் ஆழமாய் உரைப்பது போலவே... வலிசுமப்பர்களை வலிசுமந்தவர்களாலேயே சரிவர புரிந்து கொள்ளமுடியும். அந்த வகையில் கங்காரு நாட்டின் பெருந்தகை ஒருவர் எமைப் புரிந்து கொண்ட காதையின் ஒரு கவளத்தை இன்று சொல்லப் போகின்றேன் கவனமாய்க் கேளுங்கள்! அவுஸ்திரேலியா நாட்டுப் பேராசிரியர் Dr.John Whitehall அவர்கள்தான் சின்னஞ் சிறிய இக்காதையின் நாயகன் ஆவார். உலகை உலுக்கிய இரண்டாம் (2 ஆம்) உலக மகா யுத்தத்தில் தனது தந்தையை செங்களத்திடை இழந்தவர் இந்த நாயகன். தூரதேசம் ஒன்றிற்கு யுத்தத்துக்குச் சென்ற தந்தை அங்கேயே வீரக்களம் ஆடி...
வரலாறு பகரும் மணலாற்றுக் காட்டில் அமைந்திருந்த மைக்கல் (காமதேனு) பேஷ் தொடர்பான கதைகளை சென்ற பதிவில் வாசித்திருப்பீர்கள். இன்றைய நாளில் மைக்கல் முகாமுக்கு அடுத்துள்ள "சுவேசன்_முகாம்" குறித்துப் பார்க்க உள்ளோம்! 01) நிசாம் முகாம் 02) அதிரடி பயிற்சிப் பாசறை 03) குட்டுவன் முகாம் 04) ஜீவன்(உதயபீடம்) முகாம் 05) முரளி முகாம் 06) சோமேஷ் முகாம் 07) நீதிதேவன் முகாம் 08) காராம்பசு முகாம் 09) விடியல் (மகளிர் பாசறை) 10) சதீஷ் (நாசகாரி)...முகாம் 11) கிருஷ்ணா (அமுதகானகம்) 12) இந்திரன் முகாம் 13) சுவேசன் முகாம் என அந்தக் காட்டுக்குள் சின்னனும் பெரிதுமாக பற்பல அதிசயத் தங்கங்களும் பாசறைகளும் காணப்பட்டது.... ஒரு நாள்...
கழுகு நாட்டின் சிறப்பு படையணிகளிடம் பயிற்சி பெற்ற ஆனையிறவு இராணுவம் இரண்டாயிரமாம்(2000) ஆண்டின் சித்திரை மாதம் ஓயாத அலைகள் மூன்றின் மூன்றாம் கட்டம் ஓங்கி அடித்த போது ஓட்டம் பிடித்ததது. ஆட்டம் போட்டவர்கள் அடங்கி ஒடுங்கி ஓட்டம் எடுத்த பின்னர் எம் மக்கள் எழுச்சி பெற்று களமுனை நோக்கி ஓடோடி வந்து தங்கள் புலிப் பிள்ளைகளை ஆரத்தழுவி ஆரவாரப்பட்டனர். எழுச்சி கொண்ட எமது அருமை மக்களில் பலர் பலகாரம் உட்பட பல வகைப் பண்டங்கள் செய்து கொண்டும் வந்தனர்! வயதான சில அன்னையர் தங்கள் கைகளால் ஊட்டியும்...
ஒளிகொண்ட இந்த படத்தினைப் பார்த்தவுடன் "நனவிடை தோய்கின்றது" எந்தன் இளகிய இலக்கிய மனம்! எங்கள் திருவூர்கள் தோறும் "பெட்ரோல் மக்‌ஷ்" பற்ற வைக்கத் தெரிந்த திறனாளர்கள் (Experts) போலவே "ஆட்டுக் கடாய்" அறுத்துப் பங்கு போடவும் சில திறனாளிகள் இருந்ததுண்டு. தென் வயவையில் "ஆவரங்கால் ஆறுமுகம்" என அழைக்கப்பட்ட எங்கள் சின்னத் தாத்தா ஆடு பிடித்து அடித்து உரித்துப் பங்கு போடுவதில் பிரபலம் வாய்ந்தவர் மட்டுமல்ல கை தேந்தவரும் ஆவார்! தென்மூலைக் குறிச்சியில் இன்னும் ஒரு பெரியவர் இருந்தார் அவரை "என்னம் பெரேரா" என அழைப்போம். மறி ஆட்டினை "கடாய் ஆடு"...

அண்மைய பதிவுகள்

POPULAR POSTS