27.5 C
Jaffna
Thursday, November 21, 2024
. தாயாகி இறைவன் பூமி வந்தான் என்பார்கள் தாய்க்கே தாயாகி இறைவனுக்கும் நீ மேலானவனே..! தூரமாகித் தாயருகில் இல்லாத காலங்களிலும் அரூபனாய் தாயவளை தாங்கிய தனயனே..! இதயத்தின் துடிப்பாக அன்னையைக் கொண்டவனே..! அன்னைக்கு ஒன்றென்றால் கனவில் கண்டு சொல்வாயே..! தாயைக் காக்க நீ கவசமாய் ஆனாயோ..! தந்தையை மந்திரமாய் சிந்தையில் கொண்டவனே.. உந்தையே அண்ணாந்து பார்க்கும் அளவுக்கு விண்ணென உயரமாய் உயர்ந்து நின்றவனே.. தந்தை தன் நாட்குறிப்பை உன் கையில் தந்தாரே.. அத்தனையும் உள்ளெடுத்து உயிராக வாழ்ந்தாயே.. தந்தை தனிய என்றா தரணி விட்டு சென்றாயோ.. அண்ணைக்கு ஒன்றென்றால் உன்னைக் கொடுப்பாய் என்பாயே.. அடிவாழை அவனென்று அண்ணன் மகனைச் சொல்வாயே.. பெறாமக்கள் ஆனாலும் என் மக்கள் போலென்பாயே.. பொன் மகள்கள் எந்நாளும் நலம் வாழ நினைப்பாயே.. மனம் வாட வைத்து நீயும் மறையாகிப் போனதேனோ..? அக்காமார்...
அமரர் நண்பன் மேந்தனுக்கு எமது கண்ணீர் அஞ்சலிகள் தர்மேந்திரா எனும் தனையனே நீ ஓர் தவப்புதல்வனென நாம் சிரம்தாழ்த்தி கரம்கூப்பி உனைவழியனுப்புமுன் சிலவரிகள் உன்பணிபற்றியதாய்.... மனிதருள் மாணிக்கம் என்றால் போல் நீ மண்ணையும் மக்களையும் நேசிக்கமறக்கவில்லை . பிறந்த அந்த ஊர்ப்பெயரைப்பேணவும் மறக்கவில்லை . கற்ற அந்தக் கல்லூரி மேம்பாட்டைப்பேணவும் பின்னிற்கவில்லை இதற்கமைய ஓர் பழையமாணவர் பட்டறையை உன்வாழ்விடத்தில் நிர்மாணித்து நிலைபெறச்செய்த செம்மலாய் இன்று நீ எமைஎல்லாம் விட்டு விண்ணுலகம் சென்றாலும் மண்ணுலகம் உள்ளவரை மறுப்பதற்கோ மறப்பதற்கோ யாரும் இல்லை . அப்பட்டறையின் விழுதாக நீ நின்று ஆற்றி நின்ற சேவையெல்லாம் இனிக் கிட்டாதோ...
எந்தன் அருமை நண்பன் மேந்தன் எனை "எழுது எழுது " எனச் சொன்னான்! எம்மோடு பாடசாலையில் படித்துவிட்டுப் பின்னர் சன்னங்கள் நடுவே சன்னதம் கொண்டாடி விழி மூடித்தூங்கும் உன்னதங்களைப் பற்றியே எழுதச் சொன்னான்! குப்பிளான் பார்த்தீபன், வயவையூர் நிமலன்,பலாலி பிரபா, அச்செழு கோபாலக்கிருஷ்ணன் என அந்தப் பட்டியல் நீண்டது!.... நன் மாந்தனான மேந்தன் "வயவன்இணையம்" தனை நிறுவி அதனூடக எனை ஆற்றுப்படுத்தினான்! அஃதே, இந்த நூற்றாண்டில் உலகம் சந்தித்த மாபெரும் மானுடப் பேரவலமாகிய முள்ளிவாய்க்கால் மண்ணில் இருந்து வந்த எந்தன் வலியைப் போக்கிட முயன்றான்! ஆனால், இன்று மேந்தனின் இழப்பின் வலியை ஆற்றுப்படுத்த முடியாமல் தோற்றுப்போகின்றேன்!   -வயவையூர் அறத்தலைவன்-
ஒரு நத்தார் நாளில் மல்லாவி தேவாலயத்திற்கு மருத்துவர் அமுதன் அவனையும் அழைத்துச் சென்றார். அருட் தந்தை கருணாரத்தினம் (Rev. Father Mariampillai Xavier Karunaratnam) அடிகளார் தலைமையில் இரவுப் பூசை நடைபெற்றுக் கொண்டிருந்தது. ஆம், கிளி ஃபாதர் என தமிழர்களால் வாஞ்சையோடு அழைக்கப்படும் எங்கள் தேசத்து அருட் தந்தையால் ஆங்கு தூய தமிழில் பூசைகள் நடைபெற நடை பெற அவன் அனலிடை அகப்பட்ட மெழுகாய் உருகத் தொடங்கினான்! பாமரருக்கும் படித்தவர்களுக்கும் இலகுவில் விளங்கிக் கொள்ளக் கூடிய வகையில் அந்தப் பூசை ஓசை நயம் பெற்று இலங்கியது! வழக்கொழிந்து போன வடமொழியாகிய சமஷ்கிருத...
"தாயாகிய தனித்துவம்" எனும் கனதியான இந்த நன்நூலின் எமது தமிழ்பேசும் சமூகத்திற்கு இன்னுமோர் வரப்பிரசாதம் ஆகும். நூலின் ஆசிரியர் வைத்தியப் பெருந்தகை யாழ் தென்மராட்சி மண்ணில் அவதாரம் எடுத்து அறப்பணி ஆற்றும் நல்ல மானுடன் ஆவார்! எம் செம்மண்ணில் சமாதானக் கூத்து அண்ணாவியர் எரிக் சொல்ஹெய்ம் அவர்களால் அரங்கேற்றப்பட்ட கால கட்டத்தில் யாழ்ப்பாணத்தின் மருத்துவபீடத்திலும் அதற்கு வெளியேயும் பின்னர் யாழ் போதான வைத்தியசாலையிலும் எங்கள் விரிவுரையாளராக பல பெறுமதி மிக்க போதனைகளைச் செய்தவர்! இன்று முதுநிலை விரிவுரையாளராக உயர்ந்து நிற்கும் இந்தப் பெருந்தகை எமக்குப் போதித்த நல்லறிவானது இனமத பேதம் ஏதும் இன்றி...
தனது இரண்டு தனயன்களைத் தமிழினத்தின் விடுதலைக்காய் ஈந்த புதிய புற நானூற்றுத் தந்தை இவர் ஆவார்! வைத்துள் வாழ்வாங்கு வாழ்ந்த காலத்தில் ஆற்றிய கருமங்கள் காரணமாக இந்த உத்தமரும் உலகத் தமிழினத்தால் போற்றப்படுகின்றார்! தமிழினத்தின் ஒப்பற்ற மூத்த தளபதி பிரிகேடியர் தீபன் அவர்களுக்கு இந்தத் தந்தை தொட்டிலில் சூட்டிய பெயர் "பகீரதகுமார்" என்பதாகும். ஆம், அந்தக் காலத்துப் பகீரதன் போல எங்கள் காலத்துப் பகீரதன் ஆகாய கங்கையை பூமிக்குக் கொண்டு வரவில்லையானாலும் தமிழினத்திற்குப் பற்பல வெற்றிகளை அடுத்தடுத்துப் பெற்றுத் தந்தார். மண்கிண்டிமலை முதல் மருதங்கேணி வரை நீண்டு நிமிர்ந்த பல சாதனைச்...
நேயம் பொங்கிட நேர் குமரேசனும் தேயம் போற்றிடக் கல்வியைத் தேடிப்பின் தாயின் மானங் காத்திடுந் தனையனாய் பாயும் வேங்கைகள் புக்கனன். நல்ல கல்வியை நாடியே இந்துவில் வல்லனாகக் கற்றபின் வாய்ந்த போர் எல்லை மீட்கவென்றே மணலாறு புக் கொல்லை நீசரை ஒட்டி விரட்டினான். வீரம் மிக்க விறல் மணலாற்றுமர் தீரம் காட்டிய சீர் குமரேசனும் போரில் இன்னுயிர் நீத்துப் புகழுடல் சேரவே நின்றவன் சிந்தை மறக்குமோ. பாழியற்றிடும் பாதகர் மாண்டிட வாழியெங்கள் மாவீரர் வலிமைசேர் ஆழி போற்றமிழ் அன்னையும் வாழியே வாழிய வாழிய பல்லாண்டு வாழியவே.
பைபிளும்(Bible) ரைபிளும்(Rifle) உச்சரிப்பு முறையில் கிட்டத்தட்ட ஒத்தொலிக்கும் தன்மையது கொண்டவை! அஃதே, ஏறத்தாழ ஒரே கால கட்டத்தில் அதாவது 15ஆம்,16 ஆம் நூற்றாண்டு காலப்பகுதியில் தமிழகத்திற்கும் தமிழீழத்திற்கும் அதிகம் அறிமுகமாயின! இரு வெவ்வேறு வகையான முகங்கள் கொண்ட பொருட்கள் அறிமுகமாகிய போதிலும் "அறம்"தனை அன்றாடம் போற்றியே வாழும் இனத்தினர் Bible ஐ இலகுவில் உள்வாங்கி அரவணைத்துக் கொண்டனர்! Bible ஐ எனும் நூலினை "விவிலியம்"எனவும் "பரிசுத்த வேதாகமம்" எனவும் தமிழாக்கமும் செய்தனர்! பழந்தமிழர் எழுதி வைத்த எத்தனையோ பனுவல்கள் "ஓலைச்சுவடி"களில் இருந்து நவீன அச்சு இயந்திரம் ஏற முன்னரே "விவிலியம்"...
வயாவிளான் தெற்கைப் பிறப்பிடமாகவும் வாழிடமாகவும் கொண்ட கந்தையா பொன்னம்பலம் அவர்கள் மட்டுவிலில் காலமாகிவிட்டார். என்ற பெருந்துயரச்செய்தியை அறியத்தருகின்றோம். அன்னார் அமரர்களான ஆவரங்கால் வ.சி கந்தையா, செல்லம்மா தம்பதிகளின் இளைய மகனும், நேசமலர் அவர்களின் அன்புக் கணவரும் அமரர் க. தருமதுரை அவர்களின் சகோதரனும், காண்டீபன், தேவாஞ்சலி, பவளாஞ்சலி ஆகியோரின் பாசமிகு தந்தையும், சிற்சபேசன், மலரினி, துஷ்யந்தன், தர்சன், ஆகியோரின் சிறிய தந்தையும் ஆவார், அன்னாரின் பிரிவுத் துயர் பகிர்வதோடு அன்னாருக்கு எமது ஆத்மாஞ்சலிகள்.  

அண்மைய பதிவுகள்

POPULAR POSTS