27.4 C
Jaffna
Thursday, November 21, 2024
ஒவ்வோர் ஆண்டும் சுமார் 130 கோடி டன் உணவுப் பொருட்கள் வீணாகின்றன. வீணாகும் உணவுப் பொருட்களின் பெரும்பகுதி விளைவிக்கப்படும் நிலத்திலேயே வீணாகிறது. பருவநிலை மாற்றமும் இதற்கு ஒரு காரணமாகும். "உணவு வீணாதல் மனிதகுலம் எதிர்கொள்ளும் மிக பெரியதொரு பிரச்சனை," என்கிறார் நியூயார்க் நகரைச் சேர்ந்த சமையல் கலைஞர் மேக்ஸ் லா மன்னா. "மோர் பிளான்ஸ், லெஸ் வேஸ்ட்" என்ற நூலின் ஆசிரியரான இவர், உணவு வீணாவதை குறைக்க தனிப்பட்ட முறையில் ஒவ்வொருவராலும் பங்காற்ற முடியும் என்கிறார். "எனது வாழ்க்கைக்கு உணவு முக்கியமானதாக உள்ளது. தந்தைக்கு சமையல்காரர் இருந்ததால், அதிக உணவு...
உருமறைப்பு (camouflage) என்பதும் உயிர்களிடமிருந்து மாந்தர் யாம் கற்றுக் கொண்ட புதுக்கலை! ஒளிவு மறைவின்றிப் பார்க்கவும் பேசவும் தெரிந்த இந்தச் சின்னஞ் சிறுவர்களின் ஒளிகொண்ட இப்படத்தைப் பார்த்ததும்,.. எங்கள் அம்மா கோழிக்கு 'அடைவைப்பதும்' குஞ்சு பொரித்து வெளியே வந்து கீச்சு கீச்செனக் கீச்சுடுவதும் பொரிக்காத கூழ் முட்டைகளை மிதக்கவிட்டுப் பரிசோதிப்பதும் எந்தன் நினைவில் மலர்ந்து பல கதைகளைச் சொல்கின்றது. சிறுகால் கொண்ட மஞ்சள் நிற பஞ்சாய் தெரியும் குஞ்சுகளின் கீதம் எமை மகிழ்விக்கும். ஆம், வானத்தில் சத்தமின்றி வட்டமிடும் வல்லூறுகள், பாவ புண்ணியம் பார்க்காத பருந்துகள் போன்ற பறவைகளிடமிருந்து...
காண்டீபம் தூக்கும் எங்கள் கரங்களில் கன்னங்கரிய கைக்கடிகாரங்களே அன்று கட்டப்பட்டு இருந்தன. அடர்ந்த அடவியில்(காடு) ஒரு மணி நேரமோ இல்லை இரு மணி நேரமோ எமது காவல் கடமையை முடித்துவிட்டு அடுத்தவரை எழுப்புவதற்கு கடிகாரம் கட்டாயம் தேவைப்பட்டது. அக்காலத்தில் வெளிவந்த சில பழைய கடிகாரங்களின் உள்ளே சின்னஞ் சிறிய மின்குமிழ் (light 💡) இருக்காது. கைக்கடிகாரத்தில் நேரத்தினைப் பார்ப்பதற்கு #மின்சூழ் (Torch light )அடித்துப் பார்க்கவும் முடியாது. ஆம், இரவில் காட்டில் வெளிச்சம் காட்டுவது தற்கொலைக்கு சமனானது. ஆகவே எந்த விதமான பெரிய வெளிச்சத்தையும் கடிகாரத்தை நோக்கிப் பாய்ச்சி நேரத்தைப் பார்க்க...
வயவையூரில் அவதரித்த பிரபல வழக்கறிஞர் வல்லிபுரம் இராசநாயகம் அவர்களை குண்டுக்கட்டாகத் தூக்கிச் சென்று கடலில் வீசியெறிந்தார்கள் கடைந்தெடுத்த காடையர்கள் அன்று. ஐம்பதுகளின் பிற்காலத்தில் கொழும்பு காலிமுகத்திடலில் தமிழ் பேசும் மக்களுக்காய் அறவழியில் (சத்தியாக்கிரகம்) போராடினார் என்பதற்காய் அவருக்கு சிங்களம் அந்தத் தண்டனையைக் கொடுத்தது. அந்த அறவழிப் போராட்டத்தில் வேறு சிலரும் கடுமையாகத் தாக்கப்பட்டனர் என்றாலும் இந்தக் கதையை சின்னண்ணாவுக்கும் அடியேனுக்கும் சொல்லும் போது அம்மா அழுதார். எங்கள் அம்மாவின் அழுகைக்குப் பின்னால் இரண்டு காரணங்கள் இருந்தது. ஒன்று அறவழிப் போராளியான அமரர் இராசநாயகம் நடக்கமுடியாமல் சக்கர நாற்காலியிலே அந்தப்...
நான் லண்டனில் உள்ள கிங்ஸ் கல்லூரியிலும் பின்னர் சிங்கப்பூர் சுகாதார அமைச்சின் சிங்ஹெல்த் நிறுவனத்திலும் தலைமைத்துவத் திறன்களில் பயிற்சி பெற்றேன். பள்ளி மாணவர்கள் முதல் பட்ட பின் படிப்பு மருத்துவர்கள் வரை தலைமைத்துவ பயிற்சி வழங்கிய அனுபவம் எனக்கு உண்டு. தலைமைத்துவ பயிற்சி தொடர்பான அனைத்து சர்வதேச பயிற்சி நெறிகள் மற்றும் கற்கை வகுப்புகளை எடுத்து ஆராய்ந்தால் பின்வரும் முக்கியமான கூறுகளை காணமுடியும். 1. தகவல் தொடர்பு திறன் (communication skills) 2. நேர மேலாண்மை (time management) 3. மன அழுத்த மேலாண்மை (stress management) 4....
உலகளாவிய ரீதியில் ஒவ்வொரு மே 12ம் தேதியும் சர்வதேச தாதியர் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகின்றது. செவிலியர்கள் (தாதிகள்) சமூகத்திற்கு ஆற்றும் பங்களிப்பும் அவர்களின் சேவைத் தியாகங்களையும் சிறப்பாக நினைவுகூர இத்தினம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. எங்களின் சொர்க்கபூமியான தமிழீழத்திலும் ஆண்,பெண் செவிலியர்கள், எவ்வித ஊதியமுமின்றி மக்கள் பணியாற்றினார்கள்.. இனவாத அரசின் பல்வேறு தடைகளிற்குள்ளும் பட்டமெடுத்த தாதியர்போல் பட்டறிவுத்தாதியர்கள் தேவதைகளாகி பல்லுயிர்களைக் காத்தார்கள்... களமருத்துவம் உட்பட சகல துறைகளிலும் பட்டறிவுடன் திறம்பட செயற்பட்ட எம் ஈழத்தின் தாதியர்களை மனதிருத்தி நன்றிகளுடன் நினைந்து நிற்கிறோம் இந்நாளில்.. "பட்டமுமில்லை பதவியுமில்லை பட்டறிவுப் புலிகள் மக்கள் துயர் தீர்க்கும்...
கண்ணீரிலும் செந்நீரிலும் கரைந்த காலங்கள் - பல கடுகதியாய்க் கடந்தாலும்... கஜவாகு மைந்தர்களின் தீராத கயமை கண்டு துவண்டு கண்டங்கள் - பல கடந்து வாழ்ந்தாலும்... காலதேவன் எனை அழைக்கும் காலம் கண்ணேதிரே தெரிந்தாலும்... கடந்திட முடியாத கனதியான வலி! 🥲
நேர்மை அற்ற நோர்வே தலைமையில் சமாதான நாடகம் மாங்கனித்தீவில்          ஆடப்பட்டுக் கொண்டிருந்த காலகட்டத்தில் ஒரு நாள் தமிழீழ வானொலியின் பொறுப்பாளர் தமிழன்பன் (ஜவான்) அவர்கள் ஒருவரை கிளிநொச்சி பொன்னம்பலம் ஞாபகார்த்த மருத்துவமனைக்கு அழைத்து வந்தார். பக்குவமாகவும் மரியாதையுடனும் அழைத்துவரப்பட்ட அந்த மனிதர் சாதாரணமாக சாரத்துடன் எனது அறைக்குள் சிறிது நொண்டிக் கொண்டே வந்தார். சாரத்தை மெல்ல உயர்த்திக் காட்டிய போது முழங்காலில் உரசல் காயம் ஏற்பட்டிருந்தது. "என்ன நடந்தது?" எனக் கேட்டேன்! எம்மவர்களுடன் சுண்டிக்குளம் வெற்றிலைக்கேணி, கட்டைக்காடு முதல் செம்பியன்பற்று, குடாரப்பு வரை...
01) அச்சுவேலியூர் சின்னமணி ஐயாவின் வில்லுப்பாட்டு! 02) அளவெட்டியூர் சின்னமேளம்!! 03) ஈழநல்லூர் அருணா இசைக்குழுவின் கானமழை!!! 03) ஏழாலையூர் ஆத்மஜோதி முத்தையாவின் ஆன்மீகச் சொற்பொழிவு!!! 04) கானமூர்த்தி, பஞ்சமூர்த்தி எனும் இரட்டையின் நாதஷ்வர இசை! எனப் பற்பல நினைவுத் திறவுகோல்கள் எந்தன் நினைவுப் பெட்டகத்தின் சாரளங்களை சட்டென அடித்தே அகலத் திறக்கின்றன! ஆடலும்பாடலும்எங்கள்முந்தையரின்வழிபாட்டுமுறைகள்ஆகும். ஆடலசனாகிய சிவனின் ஆடலும் வேங்குழல் எடுத்து ஊதும் கண்ணனின் கானமும் அதனையே எமக்கு உணர்த்தி நிற்கின்றன. ஆதலினால்தான் வயவையூரின்வடிவு மிக்க வழக்கத்திலும் ஆடலும் பாடலும் இடம் பெற்றிருக்கின்றன. அஃதே, ஆடல் பாடலுக்கு முத்தாய்ப்பாக ஆன்மீகச் சொற்பொழிவுகளையும் செவிகள் குளிரக் கேட்பது பெருவயவர்களின் ஞானச்செருக்கிற்கு வளம் சேர்த்தன. ஆம், ஆன்மீகச்...
மண்ணக வாழ்வுதனை முடித்து விண்ணக வாழ்வுக்கு சென்றாலும், நெஞ்சக பரப்பெங்கும், சிரஞ் சீவியாக நீவிர்தான் வாழ்கிறீர்கள்! தூய ஆவியாக நீவிர்தான் வாழ்கிறீர்கள்! எங்கள் மாவீரர்களே!... எங்களைத் தூய்மைப் படுத்தியத்தியபடியே உங்கள் தூய ஆவி எங்களுடன் இருக்கிறது! நயவஞ்சகரின் வலையில் நாம் வீழ்ந்து போகாமல் பார்த்தபடி உங்கள் தூய ஆவி எங்களை பாதுகாக்கிறது. சாதிப் பேய்கள் எமை அண்டாமல் உங்கள் தூய ஆவி எங்களைப் பாதுகாக்கிறது. மதங்கள் மதம் கொள்ளாமல் உங்கள் தூய ஆவி எங்களை பாதுகாக்கிறது. பிரதேசவாதப் பிசாசுகள் எங்களிடையியே சன்னதம் கொள்ளாமல் உன்னதமான உங்கள் தூய ஆவி எங்களை பாதுகாக்கிறது. வல்லமையுடன் சாணக்கியமும் தந்தருளும் தமிழர்களின் தூய...

அண்மைய பதிவுகள்

POPULAR POSTS