குப்பையில் கிடந்த தூயவர் உணவு; ஊண் உறக்கம் இன்றி மருத்துவம் புரிந்த மகத்துவர் காதை!

192

ஒவ்வோர் ஆண்டும் சுமார் 130 கோடி டன் உணவுப் பொருட்கள் வீணாகின்றன.

வீணாகும் உணவுப் பொருட்களின் பெரும்பகுதி விளைவிக்கப்படும் நிலத்திலேயே வீணாகிறது.

பருவநிலை மாற்றமும் இதற்கு ஒரு காரணமாகும்.
“உணவு வீணாதல் மனிதகுலம் எதிர்கொள்ளும் மிக பெரியதொரு பிரச்சனை,” என்கிறார் நியூயார்க் நகரைச் சேர்ந்த சமையல் கலைஞர் மேக்ஸ் லா மன்னா.

“மோர் பிளான்ஸ், லெஸ் வேஸ்ட்” என்ற நூலின் ஆசிரியரான இவர், உணவு வீணாவதை குறைக்க தனிப்பட்ட முறையில் ஒவ்வொருவராலும் பங்காற்ற முடியும் என்கிறார்.
“எனது வாழ்க்கைக்கு உணவு முக்கியமானதாக உள்ளது. தந்தைக்கு சமையல்காரர் இருந்ததால், அதிக உணவு கிடைக்கும் நிலைமையில் நான் வளர்ந்தேன்.

உணவை வீணாக்கக்கூடாது என்பதை எனது பெற்றோர் எனக்கு சொல்லி கொடுத்தார்கள்,” என்கிறார் மேக்ஸ் லா மன்னா.

ஆம்,

இப்போது முள்ளிவாய்க்கால் காலத்தில் எம் செம் மண்ணில் நிகழ்ந்ததோர் சம்பவத்தைப்
பார்ப்போம்!

வாருங்கள்!
வாருங்கள்!!

அவர் ஒரு மூத்த போராளி மருத்துவர், நல்ல எழுத்தாளரும் கூட. முக்கியமான மருத்துவப் பிரிவு தொடர்பான நாவல்களை உருவாக்கிய போராளி. தமிழீழ மருத்துவத் துறைக்கு என்றும் தேவையான போராளி.

அன்று நீண்ட நாட்கள் தூக்கமின்மை, தொடர் சத்திர சிகிச்சைகள் என அவர் ஓயாது ஓடிக்கொண்டுருந்தார்.

எதிரித் தாக்குதலில் காயப்பட்ட ஒரு சிறுவனுக்கு சத்திர சிகிச்சை அழித்த பின் சிறு ஓய்வு கிடைக்குமா?

அவர் எதிர்பார்ப்போடு அந்த பனைக்குற்றிகளை விட்டு வெளியில் வருகிறார்.

“டொக்டர் கொஞ்சம் தூங்குங்கோவன்… காயங்கள் தொடர்ந்து வருகுது ஓய்வு எடுத்தால் தான் நல்லது…” ஊடகப் பிரிவைச் சேர்ந்த நண்பன் ஒருவன் அவரை வற்புறுத்துகிறான்.

” ம்ம்… சாப்பாடு எதாவது இருக்காடா…?
தெரியல்ல டொக்டர்.

உணவு வைப்பதற்காக இருந்த தறப்பாள் கொட்டிலுக்குள் போன மருத்துவர், அங்கே எதுவும் இல்லாதது கண்டு பசியுடன் திரும்புகிறார்.

அப்போதெல்லாம் பசி என்பதற்காக பணியில் இருந்து விலக முடியாத சூழல். அதனால் பசியைப் பொருட்படுத்தாது சிறிய ஓய்வுக்காக தனது கொட்டிலுக்கு போகிறார்.

அவரது விழிகளுக்கு குப்பைத் வாளியில் ஒரு பொதி தெரிகிறது. யார் என்று தெரியவில்லை எப்போது உண்டார்கள் என்று கூடத் தெரியாது. ஆனால் பழுதடையாத நிலையில் கசக்கி வீசப்பட்ட ஒரு பொலித்தீன் (shoping bag) பை கண்ணில் தெரிகிறது.

அதைப் பார்த்து அந்த உணவை வீணாக்கியவர் மீது கோவம் வருகிறது. ஆனாலும் யாரிடம் நொந்து கொள்ள?

அந்த பையை விரித்துப் பார்க்கிறார். அதற்குள் ஒரு திரளை சோறும் பருப்பு கறியையும் குழைக்கப்பட்டிருந்தது. அதை சுவைத்து உண்கிறார். உண்டு விட்டு வாளியில் இருந்த தண்ணீரில் கையை அலம்பிக் கொண்டு வெளியில் வருகிறார்.

புலம்பெயர் தேசங்களில் சரி தாயகத்தில் சரி பெற்ற பிள்ளைகள் உண்ட உணவைக் கூட தாம் உண்ணக் கூடாது என்பதற்காக குப்பையில் வீசும் பல பெற்றவர்கள் வாழ்வது கண்ணூடு.

அவ்வாறான உறவுகளுக்குள் இவ்வாறான மனிதர்களும் வாழ்ந்திருக்கிறார்கள் என்பது மனதை நெருடுகிறது.

 

இவர் மட்டுமல்ல இவ்வாறு பல ஆயிரம் போராளிகள் வாழ்ந்தார்கள். குப்பையில் இருந்தவற்றை கூட உணவாக்கினார்கள்.

காட்டுக்குள் இருந்த பன்னை இலைகளை அவித்து உண்டார்கள்.

இலக்குகளை அடைய வேண்டும் என்பதற்காக கிடைத்தவற்றை பச்சையாகவே உண்டார்கள் .

தமது சிறுநீரைக் கூட குடித்து உயிர் வாழ்ந்தார்கள்.

அவ்வாறு வாழ்ந்த பல ஆயிரம் போராளிகள் இன்று நடைப்பிணங்களாக வாழ்கிறார்கள்.

அவர்கள் எல்லோருக்கும் ஒரு சுட்டியாகவே இந்தக் கதையில் இவர் கோடிட்டு நிற்கிறார்.

– நன்றி இ.இ.கவிமகன்-