தொண்ணூற்றேழாம் ஆண்டெனெ நினைக்கின்றேன். முள்ளியவளையில் முதல் முதல் ஐயாவை காண்கிறேன்.
சத்தியசாயி ஆச்சிரமத்தில் ஓர் இசையரங்கு. “கெங்காதரன் டொக்ரர் புல்லாங்குழலாம்”.
புல்லாங்குழலை ஒரு அரங்க நிகழ்வாக அன்றுதான் முதலில் பார்க்கப்போகிறேன்.
பக்கவாத்தியக்கலைஞர்கள்
எல்லாம் வந்துவிட்டார்கள்.
அந்த எழிமையான மனிதன் சைக்கிளில் ஒரு பையில் மூன்று புல்லாங்குழல்களை கொண்டு வந்தார்.
ஒரு மருத்துவர் காரிலோ அல்லது வேறேதும் வாகனங்களிலோ வருவார் எனவே எதிர்பார்த்திருந்தேன்.
அந்தக்கம்பீரமான நடையுடன் வந்து அரங்கில் அமர்ந்தார்.
அரங்கு ஆரம்பமாயிற்று.
திகைப்புடனும், வியப்புடனும் வேணுகானத்தில்சொக்கிப்போனேன்.
கணீரென்று காதுகளில் பாய்ந்தது வேய்ங்குழலின் ஸ்வரங்கள். இன்னும் என்னிதயத்தைத் தொட்டது!
“ கற்பகவல்லி நின் பொற்பதங்கள் பணிந்தேன் “ எனும்...
பொங்கி எழுந்த பென்னம்பெரிய ஆழியின் அலைகளுடனும்
பொருதியபடியே மங்கிய நிலாவொளியில் குடாரப்பு நோக்கிப் பயணப்பட்டுக் கொண்டிருந்தோம்.
நஞ்சணிந்த வஞ்சினம் கொண்ட நெஞ்சினிலே "வெல்வோம் வெல்வோம்" எனும் நம்பிக்கையும் விடுதலை வேட்கையும் விஞ்சியே நின்றாலும்
Sea sickness காரணமாய் படகிலிருந்த போராளிகளில் பலர் களைப்படைந்திருந்தனர்.
போராளிகளில் சிலர் சத்தி எடுத்ததால் மேலும் சோர்வடைந்தனர்.
ஆதலால் களமருத்துவர்களாகிய எங்களின் பணி விசைப்படகிலேயே ஆரம்பித்திருந்தது.
சத்திக்காக(Vomiting )அல்லது குமட்டலுக்காக( Nausea) கொடுக்கப்படும் அனைத்துமே சத்தியை நிறுத்திவதுடன் நித்திரையைத் தூண்டக் கூடியது என்பதால் மாத்திரைகளைக் கொடுக்கவும் முடியாமல் திண்டாடினோம்....."
அதே நேரம் கடலில் உண்டாகக் கூடிய அனேக விடையங்களை...
ஆனைகள் அழகழகாய் சோடி சோடியாய் அணிவகுத்து வந்து ஆடிப்பாடிச் {டூயட் பாடி} செல்லும் அந்தப் பொன்னூரின் பெயர் தென்னியன்குளம் ஆகும்!
தென்னியன்குளத்துக் கிராமத்தின் அடர் அடவியும் அடவியை அண்டிய பெரியகுளமும் குளத்தோர வயல்வெளியும் ஆனைகளினதும் ஏனைய காட்டு விலங்குகளின் சொர்க்காபுரி என்றே பசொல்லலாம்.
பெற்றோரியத்திற்குப் பெயர் பெற்று
அப்படித்தான் ஒரு முறை டூயட் பாடிய ஒரு சோடி
ஆனை ஒரு குட்டியைத் தவறவிட்டுச் சென்றுவிட்டன.
வேட்டைக்கு சென்ற ஒருவர் காட்டுவித்தனில் தனித்து அலைந்த அந்தக் குட்டியை அங்குள்ள தேவாயலப் பங்குத் தந்தையிடம்
பக்குவமாய் ஒப்படைத்தார்.
தேவாயலத்தில் பசியால் கத்திய ஆனைக்குட்டிக்கு தனது...
எமது இனிய சகோதரனின் முதலாம் ஆண்டுத் திதி.
மார்கழி 31 - 2023.. எங்கள் அருமைச் சகோதரன் கட்டுடல் தளர்ந்து கைகால் நலிந்து அறிவு சோர்ந்து கண்கள் சொருகி எங்களை மறந்த ஒற்றை நாள்.
எங்கள் மனங்களில் காரிருள் சூழ எங்கள் உயிர்நாடிகள் இடியோசை கேட்ட நாகம் போல் தடம்புரண்டு நின்றது. செய்தி கேட்ட அந்த நொடி இரத்தத்தில் இன்று வரை உறைந்து போயுள்ளது. தக்க தருணங்களில் எம்மைத் தாங்கி நின்ற நீ எம்மைத் இவ்வாறு தவிக்க விட்டுப் போவாய் என்று அன்றும் நாங்கள் எண்ணவில்லை.
உந்தன்...
எங்கள் கரும்புலி லெப்.கேணல் பூட்டோ காவியமாகிய பின்னர் யான் எழுதிய கவிதையின் தலைப்பு இது.
ஏகலைவன் குருதட்சணைக்காய் கட்டைவிரலைக் கொடுத்தவன்.
எங்கள் ஏகலைவன் வருங்கால சந்ததிக்காய் கட்டைவிரலை களத்திடை கொடுத்தவன்.
கட்டைவிரலை கொடுத்துவிட்டு
கனகாலம் களப்பணி செய்தவன்.
அந்த ஏகலைவன் வில்வித்தையில் மட்டுமே வித்தகன்.
இந்த ஏகலை சொல்வித்தையிலும் வித்தகன்.
கவிதை, கட்டுரை வரைவது தொடக்கம்
பாடலாசிரியர், நடிகர் என பல்கலை வித்தகன்.
களப்பணிகளில் கடின பணியாகி வேவு நடவடிக்கையிலும் பின்னர் சேகரித்த தகவலை வைத்து வரைபடம் வரைவதிலும் வித்தகனாய் விளங்கினான்.
எனும் தொனிப்பொருளில் யான் யாத்திருந்த கவிதை தொலைந்துவிட்டது.
இந்தப் பதிவைப் பார்த்த போது சில...
"கங்குல்"மெல்லக் கவிய
கள்ளுக்கடை தேடி
நடுத்தர வயதுடையோர்
அலை மோதிட,...மோதிட...
"கங்குல்"மெல்லக் கவிய
"தேங்கனி நீர்" சுவையுடன்
"மாங்கனி"ச் சுவையும் நாடி இளைஞர்
ஊருக்குள் உலாவிட,...உலாவிட
"கங்குல்"மெல்லக் கவிய
பூங்கனிச் சோலைகளில் சிலர் காதல் மொழி பேசி மகிழ்ந்திட,...மகிழ்ந்திட
"கங்குல்"மெல்லக் கவிய
கை கால் கழுவி
கடவுளை வணங்கி ஒரு கூட்டம் பொத்தகங்களை
புரட்டிடப் புரட்டிட!
"கங்குல்"மெல்ல கவியக் கவிய முகமெல்லாம் பச்சை கலந்த கரி நிறத்துடன் தமை உருமறைத்து உருமறைத்து!...
நாளை நமக்காய் விடியுமென நம்பிக்கையுடன் கரிகாலன் கண்மணிகளும் ஆயத்தமாகிய காதைகள் சொற்களுக்குள்
அடங்காது அடங்கிடாது!
ஆம்,
எம் செம்மண்ணில் முள்ளாய் இருந்த
எதிரிப் படைவீடுகளை
உளவு பார்க்க புறப்படுவர் உறங்காத கண்மணிகளாகிய...
வைத்திய கலாநிதி பத்மலோசினியை வல்வெட்டித்துறை வைத்தியசாலையின் மாவட்ட வைத்தியராக கடமையாற்றிய காலத்தில் இருந்தே அறிமுகமானோம்.
டொக்ரர் பத்மலோசினி அவர்களின் ஆளுமையும்,துணிச்சலும் மக்களின் உரிமைக்காகக் குரல் கொடுக்கும் பாங்கினையும் வேறு எவரிடமும் இல்லை என்பதைப் பல சந்தர்ப்பங்களில் பார்த்திருக்கின்றேன்.
வல்வெட்டித்துறை வைத்தியசாலைக்குள் அத்துமீறி ஆயுததாரிகளாக நுழைந்த இந்திய இராணுவத்தினர் அங்கிருந்த நோயாளிகளை மிலேச்சத்தனமாகத் தாக்கியதைத் தொடர்ந்து அப்போதைய பிரஜைகள் குழுவினராகிய நாங்கள் யாக்கருவில் இருந்த பிரிகேடியர் சமேராமைச் சந்தித்து நிலைமையை விளக்கினோம்.
அந்த பிரிகேடியர் உடனடியாகவே வைத்தியசாலைக்கு வருகை தந்து இந்தத் தாக்குதலை மேற்கொண்ட கப்டன் மேனனை உடனடியாக...
ஏழலையில் அவதாரம் எடுத்து குமுறும் எரிமலையாய் எதிரி முன் எழுந்து நின்றவர் வரலாறு பென்னம் பெரியது.
சொற்களுக்குள் சிக்காத பெருவீரனின் காதைதனை முழுமையாகச்செப்பிடவொண்ணாததால் இடையிலிருந்தே ஆரம்பிக்கின்றேன்.
ஆம், கொடிய நோயினால் பீடிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக வெளிநாடு செல்ல முன்னர் சில காலம் புதுக்குடியிருப்பில் அமைந்திருந்த கீர்த்திகா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
ஓய்வு நிலையில் இருக்கவேண்டியவர் ஓயவில்லை.
வைத்தியசாலையில் இருந்த வண்ணமே நிர்வாக வேலைகளையும் கவனித்தவாறே இருந்தார்.
தமிழீழ படைத்துறையின் தொழில்நுட்ப, எந்திரவியல் வளர்ச்சிக்காக அதியுயர் மதியுகம் கொண்டு செயற்பட்டுக் கொண்டிருந்த அவரது பணிதனை ஆற்ற யாரும் இல்லை என்பது அவருக்கு தெரியும்.
கொடிய...
அழகான இந்த ஒளிப்படம் எனைத் தொண்ணூறுகளின் மதியத்திற்கு அழைத்துச் செல்வதைத் தவிர்க்க முடியவில்லை.
எங்கள் தங்கத் தாய்நிலத்தில் அங்கமாகிய ஒவ்வொரு ஊருக்கும் அல்லது ஒவ்வொரு பிரதேசத்திற்கும் நனிசிறந்த தனிச்சிறப்புக்கள் உண்டு.
அந்த வகையில் இவை வடமராட்சி மண்ணின் சிறப்பு உணவு வகைகள் ஆகும்.
பருத்தித்துறையின் ஓடைக்கரைத் தோசை போல பருத்தித்துறை வடையும் தனித்துவச் சுவை கொண்டது.
நடுவே இருக்கும் "புளுக்கொடியல்"ஐ விட ஏனைய அனைத்து பலகாரங்களும் வடமராட்சியில் இருந்து மணலாற்றுக்கு ஒரு குறித்த கால இடைவெளியில் மக்களால் அன்போடு அனுப்பி வைக்கப்படுவதுண்டு.
ஆங்கு ஒரு தங்ககத்தில் வைத்துச் சின்னஞ் சிறிய...
மாரியம்மனையும்
மருதமடு மாதாவையும்...
தமிழர்கள் ஒரு போதும்
வேறுபடுத்தியது கிடையாது!
ஏசுநாதரையும்
ஏழுமலையானையும்..
தமிழர்கள் ஒரு போதும்
வேறுபடுத்தியது கிடையாது!
செபமாலையும் பூனூலையும்
கடிந்து பாசறை புகுந்து...,
நஞ்சுமாலை அணிந்து
களமாடி களமாடிக் காவியமான...
எங்கள் காணரும் வீரர்கள் காலத்து
ஒற்றுமையின்சூத்திரமே
மதங்களைக் கடந்து
மானுடத்தை நே(யா)சிப்பதுதானே!
✊✊✊