27.4 C
Jaffna
Thursday, November 21, 2024
இது வயாவிளான் பற்றி விக்கிபீடியாவில் உள்ள சிறு குறிப்பு. இதில் தவறு இருக்கலாம். இன்னும் தகவல்கள் சேர்க்கலாம்... அதை செய்ய ஒரு அணில் முயற்சி. வயாவிளானும் நானும் என்ற தலைப்பில் உங்கள் மன ஓட்டங்ககளை வயவனுக்கு அனுப்புங்கள். தற்போது வயாவிளானின் மீளெழுச்சிக்காக அமைப்புகளும், தனிநபர் முனைப்புகளும் தோற்றம் பெற்று மகிழ்வைத் தருகின்றன. அவை தொடர்பான தகவல்கள், அமைப்பு ரீதியான செய்திக்குறிப்புகள், இன்ன பிற ஆக்கங்கள் என்பவற்றையும் வயவனில் பிரசுரிக்கலாம். அனுப்ப வேண்டிய முகவரி vayavans@gmail.com   வயாவிளான் (Vayavilan) என்பது இலங்கையின் வடமாகாணத்தில் யாழ்ப்பாணக் குடாநாட்டில் உள்ள ஒரு கிராமம். வலிகாமம் வடக்கு பிரதேசச் செயலாளர் பிரிவைச் சேர்ந்த இக்கிராமம்...
இமைகளின் மீதமர்ந்து விட்ட கனவுகளுடன் தூக்கத்தில் நடக்கிறேன் பகலிலும்.. காற்றும் கடலும் புணர்ந்து பிறந்த அலைக்குழந்தையின் அழுகையும் எழுப்பவில்லை.. மழைத் தூரிகை மண்ணில் வரைந்த காடுகளின் கீதமும் கலைக்கவில்லை.. நிலக்காரிகையின் மலைப் பருவமேடுகள் பெய்கின்ற கந்தர்வமும் உசுப்பவில்லை.. இயற்கையும் கொதித்திருக்கும்.. அடைமழையென வீசப்பட்ட சூரிய எரிகற்களில் பற்றி எரிந்தன கனவுகள்.. அணைந்துதான் போயிற்று ஆதவனின் கோபம்.. ஆகாயக் குடை திரண்டு வந்து சாமரச் சுகம் தந்தது.. அப்போதுதான்.. என்கிருந்தோ வந்த மனத்துளி வேரை நனைத்தது.. கட்பூக்கள் பூத்தன..
நீயாண்ணா எனும் தங்கையின் பார்வை.. திருத்தவே முடியாதெனும் அண்ணனின் தோரணை.. என்னடா.. இப்படிப் பண்ணிட்ட என்ற அம்மாவின் வாஞ்சை.. எதுவுமே எதுவும் செய்திடவில்லை எப்போதும் போல.. அப்பா மட்டும்தான் மிச்சமெனும் நினைப்புத்தான் மிஞ்சியது. சட்டென்று ஒரு வலி சுள்ளென்றது காய்ந்த காயத்தில் முரட்டுச் சுவர் தேய்த்த மாதிரி.. எப்போதும் திட்டியே பழக்கப்பட்ட அப்பா எதுவும் பேசாமல் போன போது..  

மழை

உள்ளே இருந்து வெளியில் வெறித்தாள் அவள். அவளைத் தொட முடியாத சோகத்தில் யன்னல் கண்ணாடியில் தலை மோதி தற்கொலையானது வெளியில் பெய்த மழை..
தமிழ் மன்றத்தில் தாமரை எழுதியது. படித்ததில் பிடித்ததாலிங்கேயும்.. சில மன்ற உறுப்பினர்கள் வானவியலில் மிகவும் ஆர்வம் காட்டி வருகிறார்கள். அத்தகைய வானவியல் தகவல்கள் பல திரிகளில் சிதறிக்கிடப்பதை விட ஒரே இடத்தில் இருந்தால் பயன் மிக அதிகமாக இருக்கும் என கருதுகிறேன். வானவியல் தகவல்களை, புதிரோ புதிர் போல ஒரே இடத்தில் பெற இது நல்ல வாய்ப்பாக இருக்கும். முதலில் ஸ்டார் கேஸிங்.. மென்பொருள் ஒண்ணு பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள். http://download.cnet.com/3001-2054_4...abeb2cc115f5b6 இதை நிறுவிக் கொள்ளலாம். இதன் பிறகு வானத்தில் நட்சத்திர மண்டலங்களை 12 இராசி மண்டலங்கள் அப்புறம் 88 நட்சத்திர...
விழி அம்புகளால் துளைத்து இதயகீதம் இசைத்துவிட்டு குடிவராமல் போகிறாயே நீ என்ன மர(ன)ங்கொத்தியா...?
அன்பர்கள் அனைவருக்கும் வணக்கம். அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள். அனைவர் நெஞ்சிலும் இன்பம் பொங்கட்டும். இந்நன்னாளில் வயவன் இணையம் மலர்வதில் மகிழ்ச்சி. இது நாம் படித்தவற்றையும் நம்மால் இயல்பவற்றையும் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளவே இத்தளம். இது எந்த ஒரு அமைப்பினதும்/ஊரினதும் உத்தியோகபூர்வ தளம் இல்லை. இது படைப்பாளிகளுக்கும் பயனாளிகளுக்குமான தளம். களம் கட்டுக் கோப்புடன் இருக்க வேண்டும் என்பதால் சில சுய கட்டுப்பாடுகளை நாம் கடைப்பிடிக்க வேண்டும். பதிவிட விரும்புவோர் தமது உண்மைத் தகவல்களை தளத்தில் பகிர்ந்து கொள்ள வேண்டும். சக மனிதனை நோகடிக்கும் பதிவுகளுக்கு இங்கே இடமில்லை. ஒருவரை ஒருவர் மதித்துப் பழக வேண்டும். எவ்வித...

அண்மைய பதிவுகள்

POPULAR POSTS