29.8 C
Jaffna
Sunday, May 19, 2024
முன்னொரு காலத்தில ஒரு ஊரு இருந்தது. அந்த ஊரில ஒரு விவசாயி வெள்ளரித் தோட்டம் வச்சிருந்தான். அந்தத் தோட்டது வெள்ளரிக்காய் மிகவும் ருசியாக இருக்கும். தினம் தினம் தன்னால சுமக்க முடிந்த அளவுக்கு வெள்ளரிப் பிஞ்சுகளையும், வெள்ளரிப் பழங்களையும் பறித்து ஒவ்வொரு ஊரா போய் விற்று பிழைச்சு வந்தான். சுட்டிக் குரங்கு ஒண்ணு பக்கத்திலிருந்த மலைப் பிரதேசத்தில் இருந்து ஊரு பக்கம் வந்தது. வெள்ளரித் தோட்டத்தைக் கண்டதும் அதுக்கு ரொம்பவும் நாக்கில எச்சில் ஊறிச்சு.. விவசாயி வேற சந்தைக்குப் போயிட்டானா, குரங்கு இஷ்டத்துக்கு வெள்ளரித் தோட்டத்தில விளையாட...
என் பக்கம் குவிந்தது காதல் பிரபஞ்சத்து ஆதவனின் கண்வீச்சு சற்றே தீவிரமாய்!! நெஞ்சத்துள் இறுகி இருந்த காதல் பனிமலை உருகியது. குருதிக் கடலில் காதல் மட்டம் உயர்ந்தது. சிறுதட்டுகள் உரசிக்கொண்டன. உணர்வு மண்டலத்துள் பெருக்குடைத்தது காதல் விசித்திர சுனாமிபோல்! நரம்பு நதிகளின் வழி இளமையுடன் ஓடியது. இழையக் குளங்களை நிரப்பியது. தேக வயலெங்கும் மோகனச் செழுமை படர்த்தியது! என்னைச் சுற்றி காதல் சூழ் கொண்ட மேகம்! தென்றல்கள் வருடியது.. ஒன்று மட்டும் தழுவியது.. பொழிந்த மழையை ஏந்திகொண்டன என்னில் திறந்த வழிகள் யாவும்! எங்கும் பசுமை தென்றல் வந்த தடயங்களாய் என்னில் பசுமை தென்றல் விட்டுச் சென்ற தடயங்களாய்!!
1970/80 காலப் பெருசுகளின் காதல் கீதம் என்ன என்று கேட்டால், நரைத்த புருவம் விரிய, இதழோரம் குறும்பு வழிய சின்ன மாமியே.. உன் சிட்டு மகளெங்கே என்பார்கள். அத்தனை பிரபல்யம் அந்தப் பாடல். 80/90 இல் பிறந்தவர்கள் பலர் கூட அப்பாடலை மறந்திருக்க மாட்டார்கள். ஏன் நான் கூட அர்த்தம் புரியாமல், துள்ளல் இசைக்காக உதட்டில் ஒட்டித் திரிந்தேன். எவக்கிரீன் பைலாவாக ஒலித்துக்கொண்டிருக்கும் சுராங்கனி பாடல் அன்று பட்டி தொட்டி எங்கும் பட்டையைக் கிளப்பிய ஒன்று. ஏன் இன்று கூட விளம்பரப் பின்னணி இசையாகப்...
அமைப்பு - வயாவிளான் நலன்புரிச் சங்கம் - பிரித்தானியா நிர்வாகம் - தலைவர் - திரு. பொன்னம்பலம் சுகந்தன் செயலாளர் -
அமைப்பு - மக்கள் ஒன்றியம் - பிரான்சு நிர்வாகம் தலைவர் உப தலைவர் செயலாளர் உப செயலாளர் பொருளாலர்  
என் அன்பார்ந்த வயாவிளான் மக்களுக்கு வணக்கம். வயவைத் தாய்க்கு ஒரு வாழ்த்து பாடல் இல்லையே எனும் கவலை என்னை துடியாய் துடிக்க விட்டது. அதை போக்கும் வண்ணம் தாய்க்கு ஒரு பாமாலை சூடியுள்ளேன். வயாவிளான் வாழ்க வாழ்க வயவைத் தாயே வாழ்க வாழ்க வயாவிளான் மக்கள் வாழ்க வாழ்க செம்மண் கொண்ட தாயே வாழ்க வாழ்க உன் பிள்ளைகள் செழிப்புற செம்மண் தந்த தாயே வாழ்க வாழ்க செம்மண்ணில் இடடதெல்லாம் செழிப்புற தந்த தாயே வாழ்க வாழ்க உன் பிள்ளைகள் இன்புற்று வாழ உன் மடி தந்த...
மீள் குடியேற்றப்படும் வயாவிளான் மக்களின் வாழ்வாதாரத்திற்கும், கல்விக்கும் புலம்பெயர்ந்து வாழும் மாந்த நேசர்கள் பலவிதத்திலும் உதவிசெய்து வருகின்றார்கள். அவ்வழியில் vayavilan.net இணையம் பல மனிதாபிமான உதவிகளைச் செய்து வருகிறது.   அண்மையில் அவ்விணையம் சார்பாக திரு இளங்கோ தம்பிராசா அவர்கள் இரு பெண்பிள்ளைகளுக்குத் தலா 18000 உரூபாகளை அவர்களின் கல்விக்காக உதவித் தொகையாக வழங்கி உள்ளார். அவரின் இச்செயலுக்கு வயவன் இணையம் மன மகிழ்வுடன் தலை வணங்குகிறது.   தகவல் - மணிவண்ணன்
கவியரசு..  தமிழிலும் வாழ்விலும் இவன் தொடாதது எதுவுமில்லை.. இவனுக்கு மட்டும் எப்படி இப்படி வளைந்து கொடுத்தது தமிழ்? என்ற வியப்பு எனக்குள் எப்போதும் உண்டு. சாதாரணமாக நாம் பயன்படுத்தும் சொற்களையே இலக்கிய நயத்துடன் எடுத்தாள இவனுக்கு மட்டுமே உண்டு எழுத்தாளுமை.. இந்தப்பாடலைப் பாருங்கள்..  அப்படியே வரிகளைப் படியுங்கள்... அர்த்தத்தைப் பிறகு பிடிக்கலாம். https://youtu.be/muWBARd3oAk அத்திக்காய் காய்காய்  ஆலங்காய் வெண்ணிலவே இத்திக்காய் காயாதே  என்னுயிரும் நீயல்லவோ கன்னிக்காய் ஆசைக்காய்  காதல்கொண்ட பாவைக்காய் அங்கேகாய் அவரைக்காய்  மங்கை எந்தன் கோவைக்காய் மாதுளங்காய் ஆனாலும்  என்னுளங்காய் ஆகுமோ என்னை நீ காயாதே  என்னுயிரும் நீயல்லவோ இரவுக்காய் உறவுக்காய்  எங்கும் இந்த ஏழைக்காய் நீயுங்காய் நிதமுங்காய்  நேரில்...

அப்பா

கருப்பை அதிர்வுகளை அன்னை பிரதிபலிக்க இருதயத்தில் பிரதிஎடுக்கும் அன்பின் பிரதிநிதி. இரைப்பை நிரப்பியபால் ஓரவாயுடன் விரவும்போது புசிக்காமலே பசியாறும் பரமாத்மாவின் தூதுவன். மார்பில் நர்த்தனமிடும் மிதிகளின் ஸ்பரிசத்தால் மார்பகத்தில் மின்மினிகளை மிதக்கவிடும் கவிஞன். பிஞ்சுகை விரல்களால் சின்னவிரலை சிறைபிடித்து தத்தி தத்தி நடக்கும்போது சித்திரம்காணும் ஓவியன். ஏடுகளைப் புரட்டும் விரல்கள் சொல்லுமவன் மேனிவிட்ட நீரின் கனதி. பட்டமே அதன் பெறுதி. சோகங்களின் சினேகம் அகற்றும் பகலவன் அந்திமகாலம் வரை களத்து மேட்டுகாரன்.. மோகன சாகரத்தால் மோகமூட்டும் நிலவவன் அறுவடை காலம்வரை சோளக்காட்டு பொம்மை. ஆதிமுதல் அந்தம்வரை நிஜமாகவும் நிழலாகவும் தோள்கொடுக்கும் தந்தை நிகரில்லா உறவன்றோ.!

அண்மைய பதிவுகள்

POPULAR POSTS