கருணையின் பிறப்பிடம் உள்ளம்
காதலின் பிறப்பிடம் இதயம்
திருமண நிச்சயம் இறைவன் இடத்தில்
கணவன்' மனைவி' சிறப்பு ஈர் உடல் ஓர் உயிர் என வாழ்வது
குடும்பத்திற்கு அழகு பிள்ளைகள்
வீட்டிற்கு அழகு பிள்ளைகள் சிரிப்பு
பெண்மைக்கு அழகு அம்மா என அழைக்கப்படும் போது
ஆணின் கம்பீரம் சிறந்த ஆண்மகன்
என அழைக்கப் படும்போது
பெற்றோர்க்கு அழகு நல்ல பிள்ளைகளை உருவாக்குவது
தாய்' தந்தையின் நிம்மதி பிள்ளைகள் பண்பாட்டில்
கல்யாண மேடையில் பிள்ளைகள் வீற்றிருக்க தாய்' தந்தை சிந்தும் கண்ணீர் ஆனந்த கண்ணீர்
பாட்டி' தாத்தாவின்'அழகு பேரப்பிள்ளைகள் ஓடிவந்து முத்தமிடுவதில்
வீரனுக்கு அழகு போர்க்களத்தில் விழுப்புண் அடைவது
மானிடப் பண்பு...
எங்கள் தமிழ்
தமிழுக்கு அமுதென்று பெயர்' இன்பத்
தமிழ் எங்கள் உயிருக்கு மேல்
தொன்மக் குடியின் தொட்டில்
செந்தமிழாம் எங்கள் தமிழ்
காளிதாசன் நாவினில்
குடிகொண்ட தமிழ்
வள்ளுவன் குறலினில்
கோலோச்சிய தமிழ்
கம்பன் விரல்தனில்
கரைபுரண்ட தமிழ்
சுந்தரத் தெலுங்கினையும்'
கேரளத்து மலையாளத்தினையும்'
சங்கீத கன்னடத்தையும்'
பிரசவித்த தாய் தமிழ்.
இன்ன பிற மொழிகளையும்
அரவணைத்த தாயே தமிழ்
யுகத்தில் செம்மொழியாய் வீறுகொண்டு
தரணியெங்கும் பட்டொளி வீசுகின்ற தமிழ்
இக்காலம் கலியுக காலமென மானிடர் கூற'
எக்காலமும் எனக்கு அழிவில்லை எனக் கூறிய
தமிழே தமிழே நீ வாழ்க
வாழ்க' வளர்க'
அன்புடன்
வ.பொ.சு.---மாரிட்டி மண்ணின் மைந்தன்
வயாவிளான் நலன் புரிச் சங்கம் - பிரித்தானியா ஆனது வயாவிளான் அபிவிருத்திக்காக உருவாக்கப்பட்ட ஒரு தன்னார்வத் தொண்டு நிறுவனம் ஆகும்.
இது வயவை மக்களின் வாழ்வாதாரங்களுக்கு உதவுவதுடன், கல்வி, விளையாட்டு, கலை போன்ற துறை சார் முன்னேற்றங்களிலும் பங்கெடுத்து வருகிறது.
வயவிளானின் மீளுருவாக்கத்துடன் மட்டும் நின்றுவிடாது, அயல் கிராமங்களின் வளர்ச்சிக்கும் உதவுவதில் முனைப்புக் காட்டி வரும் இந்த அமைப்பின் பொதுக்கூட்டம் 3/6/2017 இல் நடைபெற்று நிர்வாகம் முறைப்படி தெரிவு செய்யப்பட்டது.
நிர்வாக சபை:-
தலைவர் :- பொ.சுகந்தன்
உப தலைவர் :- செ.சுரேஸ்குமார்
செயலாளர் :- ரா.ஜெயக்குமார்
உப செயலாளர் :- ரா.ராகினி
பொருளாளர்...
விவசாயி அன்றிரவு நிறைய பிளேடுகளை எடுத்துகிட்டு தோட்டத்துக்குப் போயி, முத்தின வெள்ளரிக்காயில எல்லாம் பிளேடுகளை சொறுகி வச்சிட்டான்.
அடுத்த நாள் மறுபடி குரங்கு வந்திச்சாம். அன்றும் வெள்ளரிப் பிஞ்சுகளை எல்லாம் தின்னுட்டு ஆய்போயிட்டு முத்தின காய்களில் போய் துடைக்க..
வாலு வெட்டுபட்டு போச்சாம்.
குரங்கு காய் மூய்ன்னு கத்திகிட்டு ஓடிச்சாம் ஒடிச்சாம் மலைக்கே ஓடிச்சாம்..
என்ன செய்யறதுன்னே தெரியலை. பின்னால ரத்தம் வருவதே நிக்கலை..
அங்க மலைமேல போய் ஒரு பாறைமேல காயத்தை அழுகி ஒக்காந்துகிச்சாம்.
கொஞ்சம் கொஞ்சமா இரத்தம் வழியறது நின்னது... வெயில் ஏற ஏற இரத்தம் காஞ்சு பாறையோட...
வானத்தைப் பார்ப்பது என்றால் நமக்கெல்லாம் தெரிந்த முதல் பொருள் சூரியன்
சூரியன் ஒரு நட்சத்திரம். அது பூமிக்கு அருகில் இருப்பதால் பகலில் சூரியன் இருக்கும் பொழுது சூரியன் மட்டுமே தெரிகிறது. சில சமயங்களில் மாத்திரமே பகலில் சந்திரனும் தெரியும்.
பூமிக்கும் சூரியனுக்கும் இடைப்பட்ட தூரம் சராசரியாக 14.960 கோடி மைல்களாகும். சூரிய ஒளி பூமியை அடைய எட்டு நிமிடங்கள் ஆகின்றது,
சூரியனின் குறுக்களவு 13,90,000 கிலோமீட்டர்கள் ஆகும்.
சுரியன் மேற்பரப்பின் வெப்ப நிலை 5800 கெல்வின் ஆகும். அதாவது 5527 செல்சியஸ்.
சூரியனில் 70 சதவிகிதம் ஹைட்ரஜனும் 28சதவிகிதம் ஹீலியமும்...
வயவை சுகந்தன்
ஒவ்வொரு உயிரினத்துக்கும் ஒவ்வொரு சிறப்பு உண்டு. நாம் அச்சப்படுகின்ற, தவறென எண்ணுகின்ற சில இன்னொன்றுக்கு சிறப்பானதாகி விடுகிறது. எனவே எதையும், எவரையும் நாம் தாழ்வாக எண்ணாமல் மதிக்க வேண்டும்.
சிங்கத்தின் அழகு சீற்றம்
புலியின் அழகு பாய்ச்சல்
யானைக்கு அழகு தந்தம்
காளைக்கு அழகு கொம்பு
பசுவிற்கு அழகு மடி
மானின் அழகு புள்ளி
நாயின் அழகு நன்றியாய் இருப்பது
மயிலின் அழகு தோகை
காக்கைக்கு அழகு கருப்பு
கிளிக்கு அழகு பச்சைநிறம்
தவிர்க்கமுடியாத காரணங்களினால் பிற்போடப்படட வயாவிளான் மத்திய கல்லூரி பழைய மாணவர்கள் ஒன்று கூடல் நிகழ்வு மீண்டும் 03 /02 /2018 சனிக்கிழமையன்று நடைபெறவுள்ளதென்பதை கல்லூரி பழையமாணவர்கள் மற்றும் நலன்விரும்பிகளுக்கு அறியத்தருகின்றோம்
அலை கடலெனன் திரண்டு வாரீர்... ஆதரவு தாரீர்...
இன்னும் இருப்பது
வயவை மக்களின் கடின உழைப்பு அனைவருக்கும் வழிகாட்டி. வாழ்வாதரம் அற்ற நிலையிலும் கல்வியைக் கைவிடாத போர்க்குணம் வயவை மக்களுக்கு உண்டு. அவற்றுக்கு பல எடுத்துக்காட்டு உண்டு. அந்த வகையிம் அண்மையிம் வெளியான புலமைப் பரிசில் தேர்வில் வயவையை அன்னை பெருமை அடைய வைத்திருக்கிறார் செல்வன் வினோத்.
வயாவிளானைப் பூர்வீகமாகக் கொண்ட திரு.சீவரத்தினம் அவர்களின் பேரனும், திரு வினோத் திருமதி கவி வினோத் அவர்களின் மகனுமாகிய செல்வன் வினோத், 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற புலமைப் பரிசில் தேர்வில் சிறப்பாகச் சித்தி அடைந்துள்ளார்.
இவர் இடம்பெயர்ந்து கரந்தன்...
ஆண்டொன்று ஆனால் என்ன.
ஆயிரம் தான் கடந்து போனால் என்ன.
ஆலமரம் சரிந்தது விழுதுகள் வளர்ந்த பின்னே.
சூரியன் மறைந்தது எம் மண் விடுதலை பெற முன்னே.
உங்கள் வைத்தியம் தொலைந்தது கரையினை தொடும் முன்னே.
இருள் நடுவினிலே லாம்போடு உங்கள் இல்லம் வாந்தாலும்.
அன்போடு அரவணைத்து வைத்தியம் புரிந்த உத்தமரே.
பணம் என்று வாய்விட்டு கேற்காது, கொடுப்பதை வாங்கும் அன்புருவே.
ஒளிதரும் சூரியனாக இருள் அகற்றும் சந்திரனாக.
ஊர்போற்றும் நல்லவனாக பார் போற்றும் வல்லவனாக.
வாழ்வாங்கு வாழ்ந்து- ஊருக்குள் வைத்தியம் செய்து.
உயிர் காத்த எம்மை வாழவைத்த தெய்வமே.
நாங்கள் கலங்கி நின்றாலும்
உங்கள் ஆத்மா சாந்தியடைய.
எங்கள் குலதெய்வங்களை பிரார்த்திக்கின்றோம்.