தமிழுக்கு ஒரு மழலைப் பாட்டு

119

எங்கள் தமிழ்

 

தமிழுக்கு அமுதென்று பெயர்’ இன்பத்

தமிழ் எங்கள் உயிருக்கு மேல்

தொன்மக் குடியின் தொட்டில்

செந்தமிழாம் எங்கள் தமிழ்

காளிதாசன்  நாவினில்

குடிகொண்ட தமிழ்

வள்ளுவன் குறலினில்

கோலோச்சிய தமிழ்

கம்பன் விரல்தனில்

கரைபுரண்ட தமிழ்

சுந்தரத் தெலுங்கினையும்’

கேரளத்து மலையாளத்தினையும்’

சங்கீத கன்னடத்தையும்’

பிரசவித்த தாய் தமிழ்.

இன்ன பிற மொழிகளையும்

அரவணைத்த தாயே தமிழ்

யுகத்தில் செம்மொழியாய் வீறுகொண்டு

தரணியெங்கும் பட்டொளி வீசுகின்ற தமிழ்

 

இக்காலம் கலியுக காலமென மானிடர் கூற’

எக்காலமும் எனக்கு அழிவில்லை எனக் கூறிய

தமிழே தமிழே நீ வாழ்க 

வாழ்க’ வளர்க’

அன்புடன் 
வ.பொ.சு.—மாரிட்டி மண்ணின் மைந்தன்