கருணையின் பிறப்பிடம் உள்ளம்
காதலின் பிறப்பிடம் இதயம்
திருமண நிச்சயம் இறைவன் இடத்தில்
கணவன்’ மனைவி’ சிறப்பு ஈர் உடல் ஓர் உயிர் என வாழ்வது
குடும்பத்திற்கு அழகு பிள்ளைகள்
வீட்டிற்கு அழகு பிள்ளைகள் சிரிப்பு
பெண்மைக்கு அழகு அம்மா என அழைக்கப்படும் போது
ஆணின் கம்பீரம் சிறந்த ஆண்மகன் என அழைக்கப் படும்போது
பெற்றோர்க்கு அழகு நல்ல பிள்ளைகளை உருவாக்குவது
தாய்’ தந்தையின் நிம்மதி பிள்ளைகள் பண்பாட்டில்
கல்யாண மேடையில் பிள்ளைகள் வீற்றிருக்க தாய்’ தந்தை சிந்தும் கண்ணீர் ஆனந்த கண்ணீர்
பாட்டி’ தாத்தாவின்’அழகு பேரப்பிள்ளைகள் ஓடிவந்து முத்தமிடுவதில்
வீரனுக்கு அழகு போர்க்களத்தில் விழுப்புண் அடைவது
மானிடப் பண்பு செய் நன்றி மறவாது வாழ்வது
நாட்டுக்கு பெருமை நல்லாட்சி
இறப்பில் சிறப்பு சிறந்த மனிதர் எனப் வையகம் போற்றுவது
அனைத்தும் கிடைக்கப் பெற்றவர் பூமியில் சொர்க்கத்தை . அன்புடன் வ.பொ.சு.—மாரிட்டி மண்ணின் மைந்தன் (வயாவிளான் பொன்னம்பலம் சுகந்தன் )