வயாவிளான் மத்திய கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் பிரித்தானியக் கிளையினர் இரண்டாவது முறையாக நடத்திய ஒன்று கூடல் நிகழ்வு கடந்த 03/02/2018 அன்று மிகவும் சிறப்பாக நடைபெற்று முடிந்தது.
மிகவும் சிறப்பாக நெறிப்படுத்தப்பட்ட நடனங்கள், நாடகங்கள் என மகிழ்வுறு நிகழ்வுகளுடன் தமிழரின் விருந்தோம்பல் பண்புடனும் ஒன்று கூடல் நடைபெற்றது.
200 க்கு மேற்பட்ட பழைய மாணவர்கள் கலந்து கொண்ட இவ் ஒன்று கூடல், புலம்பெயர்ந்து வாழும் எமது இளைய தலைமுறையினரின் அரங்காற்றலை வெளிப்படுத்தியது.
பழைய நண்பர்களை நேரில்...
யாழ். பலாலியைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும், ஜெர்மனியை நிரந்தர வசிப்பிடமாகவும் கொண்ட பார்த்தீபன் ஜெசில்டா அவர்கள் 12-02-2018 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற பாக்கியநாதர், மொணிக்கா தம்பதிகளின் அன்பு மகளும்,
பார்த்தீபன் அவர்களின் அன்பு மனைவியும்,
ஜான்நெவீன் அவர்களின் அன்புத் தாயாரும்,
யசோதா(இலங்கை), நெல்சன்(சுவிஸ்), ஜான்ஸி(லண்டன்), ஜெமிலா(கனடா), வில்பிறட்(லண்டன்), அல்பிறட்(சுவிஸ்), சில்வியாடொறின்(இலங்கை), மெலிற்றீனா(ஜெர்மனி), டொன்பொஸ்க்கோ(இலங்கை), ரெஜினோல்ட்(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
பிரான்ஸிஸ் சேவியர், மொணிக்கா, ஈஸ்மன், பிரபாகரன், சுகந்தி, பஜஸ், மைக்கல் கொலிம், வினோதினி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
நத்தாஸா, மெலிஸ்ஸா, ஜெஸிக்ஹா, சரோன், நதீன், அலினா, டிலெக்சிஹா ஆகியோரின்...
தாமரைச் செல்வன்
நாள் : 1
பால் : அறத்துப்பால்
அதிகாரம் : கடவுள் வாழ்த்து
செய்யுள் : 1
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.
அகரமே எந்த எழுத்துக்கும் முதன்மையானது எந்த எழுத்தை உச்சரிக்க நாம் வாயெடுத்தாலும் முதல் ஓசையாக அதில் "அ" மறைந்திருக்கும். பல இடங்களில் அது வெளிப்படுவதில்லை.
மூச்சு வெளிப்படும் பொழுதே "அ" என்ற ஓசை ஆரம்பித்து விடுகிறது. மற்ற ஓசைகள் நாக்கு, உதடுகள், கன்னங்கள் இப்படி பிற அங்கங்கள் வெவ்வேறு விதமாக அசைவதால் பிறவடிவம் கொள்கின்றன.
அதேபோல் ஆதியாகிய இறைவனே உலகின் முதன்மையாக இருக்கிறான். இயற்கையின்...
01.02.1998 அன்று கிளிநொச்சி நகர் மீட்பில் தன்னுயிர் ஈந்து ஈழ விடுதலையில் ஆகுதியான, வயவையின் மறப்பெண் கரும்புலி கப்டன் செங்கதிர் வீரகாவியமானார்.
ஜெயரட்ணம் ஜெயேந்திரா என்ற இயற்பெயர் கொண்ட இந்த மறத்தி வயவையின் பெருமையாவாள்.
வீரவணக்கங்கள் எங்கள் மண்ணின் பெண்ணே..
வயவையின் வீர மங்கையே
உன் புகழ் வாழ்க
ஈரைந்து மாதங்கள் இன்பவலி அனுபவித்து
உனைப் பிரசவித்தாள் உன் தாய்..
தன்குருதி பாலாக்கி ஊட்டிய உன் தாய்;
தமிழினச் சிறப்பினையும் கலந்தூட்டி வளர்த்தாள்.
உன் தோழர் விளையாடி மகிழ்வுற
நீயோ
எம்மின மக்கள் நிலைகண்டு
நெஞ்சம் குமுறினாய்..
இளமைப் பருவத்தில்
ஆயிரம் இன்பக்கனவுகள் ஊற்றெடுக்க அனைத்தையும் அழித்து
எம்மின விடுதலையை இதயத்தில் வளர்த்தாய்..
இன விடுதலை...
முன்பொரு காலத்தில் ஒரு குருவும் அவருடைய சீடர்களும் சிறியதொரு காட்டுக்கு அண்மையில் வசித்து வந்தார்கள். குரு அவருடைய சீடர்களுக்கு ஒரு தேர்வு வைப்பதற்கு விரும்பினார். அவர் சீடர்களுக்காக ஒரு விருந்துக்கு ஏற்பாடு செய்தார். குருவே எமக்கு விருந்து வைக்கிறாரே என்று எண்ணி சீடர்கள் மகிழ்ந்தார்கள். வாழை இலை முன் அமர்ந்து, இந்த வேளை உணவை தமக்களித்த இறைவனுக்கு நன்றி கூறி வழிபாடு செய்தனர். அவர்கள் தங்களது உணவை உண்ண ஆயத்தமான போது குரு இவ்வாறு சொன்னார்.
“சீடர்களே! உங்களுக்கு ஒரு பரீட்சை வைக்க எண்ணுகிறேன்....
தலைப்பு கடைசிலதாங்க வந்து ஒட்டும். அதுவரைக்கும் கொஞ்சம் பொறுமையா இருந்தாக்கா நல்லது..
புள்ளையார் சதுர்த்திக்கு சன் டி.வி.ல ஒரு பட்டிமன்ற்ம். இறுதி வரைக்கும் கூட வருவது உறவினர்களா நண்பர்களா? நல்லா பேசினாஙக..ஆனா என்னமோ ஒண்ணு கொறைஞ்ச மாதிரி இருந்தது.
ஒரு கப் ஸ்ட்ராங்கான டீயை கொஞ்சம் கொஞ்சமா குடிச்சபடி யோசிக்க ஆரம்பிச்சேன்..
என்னடா ஒரு நல்ல நண்பன் அப்படிங்கறாங்களே.. அந்த நண்பனுக்கு அப்பா அம்மா அண்ணன் தம்பி அக்கா தங்கை மாமன் மச்சான் ஆப்படின்னு யாருமே இருக்க மாட்டாங்களா?
இப்படித் தன் குடும்பமாய் அமையற உறவினர்களை உதாசீனப் படுத்த...
சமூக வலைத்தளங்கள்... என்ன ஒரு பொருத்தப்பாடான, பொறுப்பான சொல்லாடல். வலைத்தளத்தில் நாம் வசிக்கத் தொடங்கி பல காலம் ஆச்சு. இசூழலில் வலைத்தளச் சமூகம் தன்னை அடுத்த கட்டத்துக்கு நகர்த்த சமூக வலைத்தளங்கள் அவசியமானவை.
சமூகம் எனும் போதே எனக்கெல்லாம் பொறுப்புணர்வு வந்து வடும். அதிலும் முகநூல் என்றால் எவ்வளவு பொறுப்புணர்வு வர வேண்டும்.
எம் மனச்சாட்சிக்கும், சட்டத்துக்கும் பயப்படுகின்றோமோ இல்லையோ.. சமூகத்துக்குப் பயப்படும் இனம் எங்கள் இனம். வேற்றினத்தவன் எல்லாம் மது, மது, சூது போன்ற தகாச்செயல்களை தெனாவெட்டாக செய்ய, நாமோ ஊருக்குப் பயந்து ஒளித்து...
உணர்வின் உரையாடல்..
முற்குறிப்பு:-
என் பயணத்தில் நான் காணும் காட்சிகளானால் என்னுள் எழும் உணர்வுகள் அறிவூடாக உரையாட முனைவதே இந்த உணர்வின் உரையாடல்.
இந்த உரையாடல் நான் சரி என நினைப்பவையையே உள்ளடக்கியது. முக்கியமான விடயம். சரி என நினைப்பவைதான்.. சரி என உறுதிப்படுத்தப்பட்டவை அல்ல. எனவே நீங்கள் அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற எதிர்பார்ப்பு என்னிடம் இல்லை. ஆனால் ஒரு நிமிடமேனும் “சரியாக இருக்குமோ” என்று நீங்கள் யோசிக்க வேண்டும் என்ற ஆசை.. இல்லை இல்லை... பேராசை உண்டு.
உரையாடும் விடயத்தைப் பொறுத்து நானும் நீங்களும் எதிர்...
வயாவிளான் மத்திய கல்லூரிக்கு வாழ்த்துப் பாடல்
வயாவிளான் மத்திய கல்லூரி வாழ்க வாழ்க
வயவைத் தாயின் செம்மண் மடியில் விதையிட்ட கல்லூரியே வாழ்க
வாழ்க
வயவைத் தாய்க்கு அணிகலனாய் விளங்கும் கல்லூரியே வாழ்க வாழ்க
பணம் படைத்தோர்' வறியோர்' எனப் பாராது
அரவணைத்த கல்லூரியே வாழ்க வாழ்க
எவு(எந்த) இனம்' எவு (எந்த)மதம்' எச்சாதி' பாராது
அனைவரையும் சமமாகக் கொண்ட கல்லூரியே வாழ்க வாழ்க
உன் உருவத்தில் மாற்றங்கள் வந்தாலும்
உன் தரம் துளிகூட குறையாது காத்து நின்ற
கல்லூரியே வாழ்க வாழ்க
வயாவிளான் மத்திய கல்லூரியே வாழ்க வாழ்க
கல்வி எனும் அறிவூட்டிய கல்லூரியே வாழ்க...