உணர்வின் உரையாடல் – 01

190

உணர்வின் உரையாடல்..

முற்குறிப்பு:-

என் பயணத்தில் நான் காணும் காட்சிகளானால் என்னுள் எழும் உணர்வுகள் அறிவூடாக உரையாட முனைவதே இந்த உணர்வின் உரையாடல்.

இந்த உரையாடல் நான் சரி என நினைப்பவையையே உள்ளடக்கியது. முக்கியமான விடயம். சரி என நினைப்பவைதான்.. சரி என உறுதிப்படுத்தப்பட்டவை அல்ல. எனவே நீங்கள் அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற எதிர்பார்ப்பு என்னிடம் இல்லை. ஆனால் ஒரு நிமிடமேனும் “சரியாக இருக்குமோ” என்று நீங்கள் யோசிக்க வேண்டும் என்ற ஆசை.. இல்லை இல்லை… பேராசை உண்டு.

உரையாடும் விடயத்தைப் பொறுத்து நானும் நீங்களும் எதிர் எதிர் அணியில் இருக்கக் கூடும். இரு கருத்தியல் ரீதியான எதிர்நிலையே தவிர எமக்குள் இருக்கும் நட்பின் முடிவு நிலை அல்ல.. அந்த விடயம் தாண்டி நானும் நீங்களும் நண்பர்களே…

அனுக்களின் மோதலில்தான் பிரபஞ்சம் தோன்றியது. உயிரணுக்களின் மோதலில்தான் உயிரினங்கள் தோன்றுகின்றன. எனவே கருத்துகள் மோதட்டும். நல்லவை பல பிறக்கட்டும்.
புதிதாய் ஒரு விதி செய்வோம்.

அடுத்த வாரம் முதல் வார வாரம் உணர்வின் உரையால் தொகுத்து தருகிறேன்.

முதல் உரையாடல் அடுத்த வாரம்..

“ வயவையை அரிக்கும் கயமை வயவன்கள்”

சந்திப்போம்..