27.5 C
Jaffna
Friday, November 22, 2024
சூரியனுக்கு அப்புறம் சந்திரன் என நினைத்தீர்கள்தானே.. சரிதான். ஆனால் மூணாவதா பூமியைப் பார்ப்போம். சந்திரனை பெண்ணாகத்தான் பலரும் பார்க்கிறார்கள்.  சந்திரன் பூமியிலிருந்து 384,4903 கி.மீ தூரத்தில் உள்ளது. சந்திரன் பூமியை 27.3 நாட்களுக்கு ஒரு முறை வலம் வருகிறது. (ஹா ஹா.. புத்திசாலிங்க நீங்க,, நம்ம ஜோதிடத்தில் 27 நட்சத்திரங்கள் எப்படி வந்தது என்று சரியா யூகிச்சிட்டீங்களே...) ஆனால் அமாவாசைக்கு அமாவாசை இருக்கும் வித்தியாசம் 29.5 நாட்கள். இதற்குக் காரணம் சந்திரன் பூமியைச் சுற்றுது.. பூமி சூரியனைச் சுற்றுது. இதனால் இதனால் சூரியனுக்கும் சந்திரனுக்கும் பூமிக்கும் உள்ள...
பெப்ரவரி 21.. உலகத் தாய் மொழிகள் நாள். தாயைப் பழித்தால் அவள் தடுத்தால் விடுவிவேன்; தமிழைப் பழித்தால் எவர் தடுத்தாலும் விடேன் என்றான் புரட்சிக் கவி வேந்தன் பாரதி தாசன். அவ்வாறானதொரு அறச்சீற்றத்தின் நெடும்பயணத்தின் குறுந்தொகுப்பே இப்பக்கம். தமிழெங்கள் தாய்மொழி. இத்தாய்மொழியில் நாம் பேசுகின்ற சொற்கள் எல்லாம் தமிழ்ச் சொற்களா? இல்லவே இல்லை.. வேற்று மொழிச் சொற்கள் தமிழிலிருந்து பிரிக்க முடியாத அளவுக்கு இரண்டறக் கலந்து விட்டன. ஐரோப்பியரின் காலணித்துவம் தமிழ் மண்ணில் வேரூன்றியதால் சில ஐரோப்பியச் சொற்களும், ஆரியர்கள் இந்தியாவில் ஊடுறுவிதால் அவர்களின் தாய்மொழியான...
சுடுகாடாய் எரிந்த எங்கள் நாட்டில், பிணம் போல வாழாமல், உறுதியுடன் களமாடி, காவியமான கண்மணியே.. கண்ணுறங்கு.. கண்ணுறங்கு... உந்தன் வரலாறு எங்கள் பிள்ளைகளின் வீரத்தாலாட்டாய் அமையும் காலம் மலரும்.. கண்ணுறங்கு.. கண்ணுறங்கு..
வயவையின் வளர்ச்சிக்கென உருவாக்கம் பெற்ற அமைப்புகளின் ஒருங்கிணைந்த சேவை வயவைக்கு கிடைக்கிறதா? என்பது எமக்கு முன்னால் உள்ள பெரியதொரு கேள்வி. அதற்கான விடையையும், தீர்வையும் எனக்குள் தேடிய போது எழுந்ததே இந்த உரையாடல் அத்தியாயம். அதற்கு முன், சென்ற அத்தியாயத்தை வாசித்த நண்பர் ஒருவர், வயவன் வயவை என்ற முகநூல் முகத்தை தனிமடலில் அனுப்பி இருந்தார், சிறு புன்னகையுடன். வயவன் எனும் பெயரில் எழுதும் நான் யாரென்பதை கடந்த அத்தியாயத்தின் முடிவில் பதிவு செய்திருந்தேன் என்பதை அந்நண்பருக்கு இத்தால் அறியத் தருகிறேன். இனி உரையாடல்.., வயாவிளான் இன்னும்...
video
https://www.facebook.com/karththikai27/videos/2002510540021311/  
நாள் : 3 பால் : அறத்துப்பால் அதிகாரம் : கடவுள் வாழ்த்து செய்யுள் : 3 மலர்மிசை யேகினான் மாணடி சேர்ந்தார் நிலமிசை நீடுவாழ் வார் இதயம் என்னும் மலரில் குடியேறினவனின் மாட்சிமை மிக்க வழிகளை சேர்பவர்கள் பூமியின் நெடுங்காலம் வாழ்வார். இறைவனை இதயத்தில் வை. அவன் சொன்னபடி நட. நீண்ட ஆயுளுடன் வாழ்வாய் என்றும் கொள்ளலாம். உனக்கு பிடித்தவரை உன் மனதில் வை. அவரை அடியொற்றி பின் தொடர் நீண்ட காலம் வாழ்வாய் எனக் காதலையும் சொல்லலாம். பூவில் இருக்கும் தேனை தொடர்ந்து அருந்துங்கள், நீண்ட காலம் வாழ்வீர்கள் என மருத்துவமாகவும் எழுதலாம். நீண்ட...
எண்ணங்களில் இருந்து மின்சாரம் எடுக்கலாம்!!! என்ன உடனே விவாதம் ஆரம்பிச்சாச்சா!! சாத்தியமா? சாத்தியமில்லையா? என்று.. அடங்குங்க மக்களே! இது அது அல்ல.. எண்ணங்களின் பண்பிற்கும் மின்சாரத்திற்கும் பண்பிற்குமான ஒரு ஒப்பீடு இது.. எண்ணங்களின் பண்புகள் மின்சாரத்தின் பண்புகளை ஒத்தவை! மின்சாரத்தின் பண்புகளை தனியே சொல்ல முடியாது. மின் தடை, மின் காப்பி, மின்னூக்கி, மின்னிரட்டை, ட்ரான்ஸிஸ்டர் என பல பொருட்களின் வழியே மின்சாரம் பாயும் பொழுது ஏற்படும் விந்தைகளை மட்டுமே மின்சாரத்தின் பண்புகளாய் கொள்கிறோம்.. அதே போல பலவகைப் பட்ட மனங்களின் வழியே எண்ணங்கள் பாயும் பொழுது ஏற்படுத்தும்...
தமிழர்தம் கலாச்சாரத் தொட்டிலின் முகம் சிதைக்கப்பட்டு பல்லாயிரம் மக்களை நிர்க்கதி நிலைக்கு தள்ளியது சூரியக்கதிர் இராணுவ நடவடிக்கை. அக்காலப் பகுதியான 1995 இல் கிளாலியில் தொடுவைப் படகெடுத்து வன்னிப் பெருநிலப்பரப்புக்கு வந்தார் #மாமருத்துவர் #கெங்காதரன் அவர்கள். 

உப்புநீரில் விளக்கெரியும் வற்றாப்பளை மண்ணில் உள்ள தனது தென்னந்தோப்பில் ஓய்வெடுக்கவே நினைத்தார். மலேரியா அதனுடன் செயற்கையாக அரசினால் ஏற்படுத்தப்பட்ட பஞ்சம் என மக்கள் பட்ட பெருந்துயர் கண்டு அங்கே தன் பணியைத் தொடரத் திருவுளம் கொண்டார். தனது 66வது அகவையில் இலவசமாக தன் மக்களுக்கு மகத்துவம் மிக்க மருத்துவ...
இலங்கைத் தீவில் நடந்து முடிந்த உள்ளூராட்சித் தேர்தலில் வயாவிளானைச் சேர்ந்த இருவர் தெரிவு செய்யப்பட்டிருக்கின்றார்கள். அவர்களுக்கு வயவனின் வாழ்த்துகள்.   மக்கள் சேவைக்கு வந்த இருவரும் எந்த வித பாகுபாடும் இன்றி மக்கள் நலன் ஒன்றை மட்டுமே உறுதியாகக் கொண்டு பணியாற்ற வயவன் இணையத்தின் வாழ்த்துகள்.
  பால் - அறத்துப் பால் அதிகாரம் : கடவுள் வாழ்த்து செய்யுள் : 2 கற்றதனால் ஆயபயன் என்கொல் வாலறிவன் நற்றாள் தொழாஅ ரெனின். கற்பதினால் உண்டாகும் பயன் என்ன? உண்மையான மெய்யறிவு கொண்டவனின் நன்மைத் தரும் கால்களை பணியாவிடின் ஒன்றுமில்லை. கல்வி அறிவினைத் தரும். அறிவு மெய்யறிவை உணரவைக்கும். மெய்யறிவை உணர்தல் பணிவினை வளர்க்கும். அதுவே கற்பதின் பயனாகும். கற்பது என்பது உணர்ச்சிகளை திருப்தி கொள்ளவைக்க அல்ல. அறிவை வளர்த்து உண்மையை உணர்வதற்கே. முழு திருக்குறளும் படிக்க

அண்மைய பதிவுகள்

POPULAR POSTS