அண்மையில் ஐபிசி தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட புனித யாகப்பர் தேவாலய திருவிழாக் கால நேர்காணல். மண்பயனுறப் பார்த்து மகிழ்வோம்.
https://www.youtube.com/watch?v=vKpDR-nI1Ow
https://www.youtube.com/watch?v=j6J18ttx2mk
ஒருவர் மகத்தான ஓர் இலட்சியத்தை மேற்கொள்வதும் அதற்காகத் தன் வாழ்நாளையே அர்ப்பணிப்பதும் ஒரு மகத்தான செயலாகும். வாழ்நாள் குறுகியது. அதை ஒரு பெரிய காரியத்தின் பொருட்டுத் தியாகம் செய்து விடுங்கள். நம் வாழ்க்கையை ஒரு மாபெரும் இலட்சியத்திற்கு அர்ப்பணித்துக் கொண்டால் தான் அந்த வாழ்க்கைக்கே ஒரு மதிப்பு உண்டு. நீ மனிதனாகப் பிறந்திருக்கிறாய். நீ வாழ்ந்து மறைந்ததற்குப் பின்னால், ஓர் அழியாத அடையாளம் எதையாவது விட்டுச் செல். அவ்வப்போது உலகத்திடமிருந்து உங்களுக்குப் பலமான அடி கிடைக்கலாம். அதற்காக மனம் குலையக் கூடாது. கணநேரத்தில்...
கூவு குயிலே கூவு குயிலே
கும்பிடுவார் மனந்தானைக் கூவு குயிலே
நாவுக்கினியவனை நல்லகுயிலே
நம்பனை இங்குவரக் கூவுகுயிலே
சிவன் சிவன் என்று சொல்லும் சித்தர் குழாம்
தேடும் பொருளை வரக் கூவு குயிலே
நாவலரும் பாவலரும் பணிந்தேத்தும்
நல்ல சிவன் இங்கு வரக் கூவுகுயிலே
தேன் சொரியும் சோலையில்வாழ் தெய்வக்குயிலே
தேவாதி தேவன் வரக் கூவு குயிலே
இளம்பிறை அணிந்த பிரான் இங்கேவர
எழிலுடன் பறந்து போய்க் கூவுகுயிலே
வாயாரப் பாடு வார்தம் மனத்தானை
வள்ளலை இங்குவரக் கூவு குயிலே.
கண்டேன் கண்டேன்
நி(இ)றைவனின்
நிறைவான
கைவண்ணம் கண்டேன்!
கண்டேன் கண்டேன்
உ(இ)றைவனின்
உயிர்கொண்ட
உயிரோவியம் கண்டேன்!
கண்டேன் கண்டேன்
கலைக்கூடம் கண்டேன்!
கண்டேன் கண்டேன்
அன்பு நடமாடும்
அழகிய கலைக்கூடம் கண்டேன்!
கொண்டேன் கொண்டேன்
பேரன்பு கொண்டேன்!
எழிலினி தர்ஷன்
வளர்நிலை 11
தனிநாயகம் தமிழ்ப்பள்ளி
வயாவிளானைப் பூர்வீகமாகக் கொண்டவரும், இலண்டனில் வசித்து வருபவருமான செல்வி.த.எழிலினி அவர்கள் A* பெற்று அதி உயர் தேர்ச்சி அடைந்துள்ளார். பன்முகத்திறமை கொண்ட இவர் கவிதை வடிப்பதிலும் தேர்ந்தவராக உள்ளார்.
கண்டேன் கண்டேன்
நி(இ)றைவனின் நிறைவான
கைவண்ணம் கண்டேன்!
கண்டேன் கண்டேன்
உ(இ)றைவனின் உயிர்கொண்ட
உயிரோவியம் கண்டேன்!
கண்டேன் கண்டேன்
கலைக்கூடம் கண்டேன்!
கண்டேன் கண்டேன்
அன்பு நடமாடும்
அழகிய கலைக்கூடம் கண்டேன்!
கொண்டேன் கொண்டேன்
பேரன்பு கொண்டேன்!
எழிலினி தர்ஷன்
வளர்நிலை 11
தனிநாயகம் தமிழ்ப்பள்ளி
வேற்று மொழிச்சூழலில் வசித்தாலும் தாய்மொழியாம் தமிழ் மொழியில் கவிதை வடிக்கும் அளவுக்கு புலமைப் பெற்றிருக்கும் இவர், இலண்டனில் நடைபெற்ற தேர்வில் அதிஉயர் தேர்ச்சி பெற்றுள்ளார். இவர் மென்மேலும் பல சாதனைகள்...
வயாவிளான் மக்களின் மீளெழுச்சிக்காக புலம் பெயர்ந்து வாழும் வயாவிளானார் பலரும் பல்வேறு விதத்தில் உதவி வருகின்றார்கள். அந்த வகையில் ஜேர்மனியில் வசிக்கும் வயாவிளானார், வயாவிளான் மக்கள் ஒன்றியம் ஜேர்மன் ஊடாக உரூபாய் 111801 ஐ மீளெழுச்சிக்கான உதவும் கரங்களிடம் கையளித்துள்ளனர். இத்தகவலை உதவும் கரங்களின் உத்தியோகபூர்வ தளம் செய்தியாக வெளியிட்டு உறுதிப்படுத்தி உள்ளது.
http://www.vayavilan.lk/?p=2574
வயாவிளானின் மீளெழுச்சி எனும் மாபெரும் பணியில் பங்கெடுத்த ஜேர்மன் வாழ் வயாவிளானாருக்கும், ஒருங்கிணைத்த அமைப்புகளுக்கும் வயவன் இணையத்தின் நன்றி கலந்த பாராட்டு வணக்கங்கள்
குடி இருந்த கோயிலுக்கு கவிதாபிஷேகம்
-வயாவிளான் பொன்னம்பலம் சுகந்தன்
அன்னையைப் போல் ஒரு தெய்வம் இல்லை.
அவள் அடி தொழ மறப்போர் மனிதரில்லை
கண் கண்ட தெய்வம் அம்மா நீ
உயிர் கொடுத்த உத்தமி நீ
பத்து மாதம் இன்ப வலி அனுபவித்து பிரசவித்தவள் நீ
உன் விழிநோக உன் தூக்கம் தொலைத்து
எனைக் அன்புக்கடலம்மா நீ
உன் குருதி பாலாக்கி என் உடல் வளர்த்தவள் நீ
என் தந்தை உற்றார் 'உறவினர்'
எனக் காட்டிய முதலம்மா நீ
நான் தூங்க தாலாட்டு பாடி
உன் தூக்கம் மறந்தவள் நீ
என் நோய் கண்டு வாடியவள் நீ
அம்மா என நாவில் தமிழ் ஊட்டிய...
எம் தலைவா அன்புத் தலைவா
தமிழ் இனம் கண்ட தெய்வமையா நீங்கள்
கலியுக தெய்வமாய் உனைக்கண்டார் எம் மக்கள்
அயலவர்கள் அன்புடன் தம்பியென அழைக்க
உன்மக்கள் பாசத்துடன் தலைவர் என அழைக்க
சிந்தையில் தமிழ் இனத்தையும்'
செயலில் வீரத்தையும்' வெளிக்காட்டினாய்
எத்திக்கும் வெற்றி வாகை சூடி
பகைவரை கலங்கடித்தாய்
கலியுகத்தில் தமிழ் இனம் காக்க
முப்படை கட்டினாய்
உன் வீரம் பகைவரையும் கவர்ந்தது
கயவர் சூழ்ச்சிவலை விரித்த போதெல்லாம்
என் கொள்கை தமிழ் இன விடுதலையே என பறைசாற்றினாய்
உனைவெல்ல தரணியில்
படையொன்று இல்லையென்பதை உணர்ந்த கயவர்
உன் கண்ணை குத்த உன் விரல்களில்
ஒரு எடடப்பனை நாடி
உனை தோற்கடிக்க
முயல
என் இன விடுதலையே மேன்மை என...
மறுபடியும் பயணம் தொடங்குகிறது
யாரோ முடித்த்ழ் இடத்திலிருந்து
புதியப் பயணமெனும் பெயரில்,,
பலர் பயணித்த பாதைகளில்
அவர்கள் தடம் பற்றியும்
புதியவர்கள் கரம் பிடித்தும்
புதிதாய்ப் பாதம் பதித்தும்,
தொடரும் அப்பயணங்களும்
முற்றுப் பெறாமல் முறிகின்றன.
பாதைகள் மட்டும்
நீண்டு கொண்டேப் போகின்றன.
வங்காள தேசத்தில் ஒரு குடியானவன் வாழ்ந்து வந்தான்.
அவனுக்கு வீரன், வினயன் விஜயன் என்று மூன்று மகன்கள் இருந்தாங்க.
வீரனும் விஜயனும் கடுமையான உழைப்பாளிகள். ஆனால் விஜயன் கொஞ்சம் புத்திசாலி..
குடியானவன் தன்னுடைய நிலத்தில் நெல் பயிரிட்டு இருந்தான். கதி முத்தியாச்சி, இன்னும் இரண்டு நாளில் அறுவடை பண்ணிடலாம்.
வீரன் காவலுக்கு வயலில் இருந்த பரண் மேல தங்கிகிட்டு இருந்தான்.
அன்னிக்கு விடியற்காலை மூணு மணி வரைக்கும் காவல் காத்துகிட்டு இருந்த வீரன், கொஞ்சம் கண்ணசந்துட்டான். அஞ்சு மணிக்கு கண்ணை முழிச்சுப் பார்த்தா எதிர்ல இருந்த வயல்ல ஒரு பயிரும்...